எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமான டாக்சியை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘மேக்கர்’ என பெயரிடப்பட்டுள்ளது. முற்றிலும் பேட்டரியால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது. ஹெலிகாப்டர் போன்றே செங்குத்தாக மேல் எழும்பும். எனவே ஓடுபாதை தேவையில்லை. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 4 பேர் பயணிக்கலாம் என்பது போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. தனது ‘மேக்கர்’ விமானத்திற்கு அனுமதி கோரி அமெரிக்க விமானத்துறைக்கு விண்ணப்பித்துள்ளது ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம். மேலும், முதல் கட்டமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களுக்கு இயக்கவும் கட்டணமாக, 50 கி.மீக்கு இந்திய மதிப்பீட்டில் ரூ. 4,000 வசூலிக்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் 2024 ம் ஆண்டு தான் இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.