பரதன் பதில்கள்

  • மனிதகுலச் சிக்கல்களுக்கு பெரிதும் வழிகாட்டுவது திருக்குறளா? மார்க்சியமா?  -மூ. பாண்டியன், திருவானைக்காவல்

மார்க்சியம் (கம்யூனிசம்) தோன்றிய மண்ணிலேயே தோற்றுப் போய்விட்டது. திருக்குறள்  மட்டுமே  எல்லாச்  சிக்கல்களுக்கும்  வழி  காட்டுகிறது.

  • இரவில்  கீரை  சாப்பிடக்  கூடாது  என்பது  ஏன்?  – வே. சுனில்குமார், திருப்பூர்

கீரை எளிதில் ஜீரணம் ஆகாது என்பதால். இரவில் கீரை மட்டுமல்ல, தயிர், இஞ்சி, பாகற்காய், நெல்லிக்காய் போன்றவைகளையும் சேர்க்கக் கூடாது.

  • பகைவனைக்   கொல்  என்கிறது   பகவத்கீதை.  இது  சரிதானா?  – எஸ். அன்பரசன், மயிலூடுதுறை

தர்மம் காக்க அதர்மம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் நியதி. நெருப்பு, நோய், பகை, கடன் போன்றவைகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிறது ஒரு சுலோகம்.

  • சிலர்  மனைவியை  அடிமை  போல  நடத்துவது  பற்றி? – ம. முனுசாமி, சேலம்

‘‘பெண்ணை அழ வைக்காதே. இறைவன் அவள் கண்ணீரை அளந்து பார்ப்பான்”- ஒரு பழமொழி.

  • போட்டியிடும் அனைவருமே அயோக்கியர்கள். அதனால்தான் நோட்டாவுக்கு வாக்களிக்கிறேன் என்று கூறுபவர்கள் பற்றி? – மி. மயில்சாமி, திருச்செங்கோடு

வேட்பாளர்களில் மோசமானவர், மிகவும் மோசமானவர் என்பதைப் பார்த்து, இருப்பதில் சுமாரானவருக்கு வாக்களிப்பதுதான் சரியானது. நீங்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால் மிகவும் மோசமானவர் வெற்றி பெற அது வாய்ப்பு அளித்துவிடும். ஜாக்கிரதை.

  • திமுக  கூட்டணியில்  ராமநாதபுரம்  தொகுதி முஸ்லிம்  லீக்கிற்கு  ஒதுக்கப்பட்டுள்ளது பற்றி? – சி. சூரியகுமார், திருநல்லாறு

திமுக கூட்டணிக்குப் பெயர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியா? கட்சி பெயரிலேயே மதம் உள்ளதே!  ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்.

  • திமுக கூட்டணிக்குப் பெயர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியா?

கட்சி பெயரிலேயே மதம் உள்ளதே!  ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்.

  • ‘மிஷன் சக்தி’ பற்றி? – சூ. ஏகாம்பரம், திண்டிவனம்

இதுவும் விண்வெளியில் நடந்த ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்தான். நாடே பெருமைப்பட வேண்டிய விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஒரு சல்யூட், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னொரு சல்யூட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *