கடந்த மக்களவைத் தேர்தலை ஜம்மு-காஷ்மீர் மக்கள் புறக்கணித்ததன் மூலம் அனந்த்நாக் தொகுதிக்குள்பட்ட திரால் பகுதியில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதேபோன்று தேர்தல் புறக்கணிப்பு தொடர்ந்தால் சட்டப் பேரவைத் தேர்தலில் திரால் பகுதியில் பாஜகவைச் சேர்ந்தவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும். பர்கான் வானி (பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் பயங்கரவாத இயக்க கமாண்டர்), ஜாகீர் முஸா (கொல்லப்பட்ட அன்சார் ஹஸ்வத்துல்-உல்-ஹிண்ட் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர்) ஆகியோர் தோன்றிய மண்ணில், பாஜகவைச் சேர்ந்தவர் எம்எல்ஏ ஆகும் சூழ்நிலை ஏற்புடையதுதானா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, தேசத்துக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரித்து ஒமர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் செய்திகள் வெளியாகி, ஒமரின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்தன.