பசுமை செங்கற்கள் செய்வோம்

பரியாவரன் எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும் பாரதீய சேவா சங்கமும் இணைந்து, பிளாஸ்டிக் தீமையை குறைக்க, ‘இல்லம் தோறும் பசுமை செங்கற்கள் தயாரிப்பு’ என ஒரு விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சி பெரம்பூர், விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கலந்துகொண்டார். இதில் சி.பி.எஸ்.சி பிராந்திய அதிகாரி க. ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சரின் முன்னிலையில், பரியாவரன் அமைப்பினரிடம், தங்கள் பள்ளி மாணவர்கள் தயாரித்த பசுமை செங்கற்களை பல பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் ஒப்படைத்தனர்.