‘பசங்க-2’: கலையுலகக் கவலை தெரிகிறது

‘பசங்க-2’: கலையுலகக் கவலை தெரிகிறது

குழந்தைகளின் மனநிலைக்கேற்ற கல்விமுறையால் அவர்களிடம் இருக்கும் திறமைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதுதான் படத்தின் முடிவு.

இந்த ஆண்டு தங்களது பள்ளிக்கு 100 சதம் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் பள்ளிகளுக்கு ஏனோ குழந்தைகளுக்கு பாரம்பரியம் பற்றியும் கற்பிக்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. யோகா போன்ற பயிற்சிகளுக்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்து வரும் கூட, ஆன்மிக இயக்கங்கள் நடத்தும் சில பள்ளிகளும், ஆர்.எஸ்.எஸ்ஸினால் ஊக்கம் பெற்ற வித்யாபாரதி அமைப்பு நடத்தும் பள்ளிகளும்தான் யோகாவையும், பாரம்பரிய விளையாட்டு, பாரம்பரிய இசை இவற்றை கல்வித் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை ஒப்புக்கொண்டுள்ளன.pasanga

அதேபோல், சுட்டித்தனத்துக்கு அருமருந்து, குடும்பங்களும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையும்தான் என்பதும் படத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

தோப்புக்கரணம் போடுவது தண்டனையல்ல. உடல் ஆரோக்கியத்துக்கான யோகா என்கிறது ஒரு காட்சி. குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை; கேட்ட வார்த்தையைத் தான் பேசுகிறார்கள்” இப்படி நறுக்குத் தெறித்தது போல பல வசனங்கள்.

குழந்தைகள் மனநல மருத்துவராக சூர்யாவின் பாத்திரம் வந்தாலும், குழந்தை வளர்ப்பில் பாரம்பரியத்தைக் கைவிடவில்லை. கதாநாயகி அமலாபால் கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செவது, குழந்தை வயிற்றில் இருக்கும் போது நல்ல இசைகளைக் கேட்பது, அவர்களில் வளர்ப்பதில் குடும்பங்களுக்கு இருக்கும் பங்கை உணர்த்துவது என, படம் முழுக்கவே, சராசரி ஹிந்துவின் வாழ்க்கை முறைதான் வெளிப்பட்டுள்ளது.

படத்தில் சோல்ல வேண்டிய கருத்துக்களை, உற்சாக மனப்பான்மையோடும்,அறிவுரைகளைக் கலக்காமல் இயல்பான உரையாடல்களோடும் கூறியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜுக்கும், நல்லதொரு படத்தைத் தயாரித்துள்ள நடிகர் சூர்யாவுக்கும் பாராட்டுக்கள்.

குழந்தைகளுடன், குடும்பத்துடன் பார்க்கவேண்டிய நல்லதொரு படம்.