பங்களாதேஷில் ஹிந்து ஆலய நிலங்களுக்கு
உரிமை கொண்டாடும் முஸ்லிம் வெறியர்கள்
பங்களாதேஷில் மனித உரிமைகளுக்கு எதிரான செயல்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன. பங்களாதேஷில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோயில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. ஆலய சொத்துகள் சூறையாடப்படுகின்றன.
ஜூன் மாதம் 21ம் தேதி கோமில்லா மாவட்டத்தில் உள்ள லால்மாய் மலைப்பகுதியில் 1,400 ஆண்டுகளுக்கு முன் வெகு சிறப்பாக கட்டப்பட்ட சிவாலயத்தை அப்துல் அலி என்ற முஸ்லிம் வெறியர் இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி எனக்கே சொந்தம். இது எங்கள் பரம்பரைச் சொத்து என்று கூறினார். கோயில் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றார். இதை அங்கிருந்த சந்தனா உள்ளிட்ட பக்தர்கள் எதிர்த்தனர். இந்த கோயில் நில உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என்றும் அப்துல் அலி வாயில் வந்தபடி கூறினார். கோயிலுக்கு மேற்குப் பக்கம் 600 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கோயிலுக்கே சொந்தமானது என்பதற்கு ஆவணமும் உள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக அண்மையில் ஒரு விடுதி கட்டப்பட்டது. இதற்கிடையே அப்துல் அலி இந்த இடம் என் வசம் ஆகும் வரை நான் ஓய மாட்டேன் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராடி வருகிறார்கள்.
ஜூன் மாதம் 17ம் தேதி நாகோன் மாவட்டத்தில் உள்ள சன்யாஸ் மந்திர், ராதா கோவிந்த் ஆலயத்தை மக்ஸாத் என்ற முஸ்லிம் வெறியர் ஆக்கிரமிக்க முயன்றார். இந்த நிலம் எங்கள் மூதாதையருக்குச் சொந்தமானது என்று அவர் கூறினார். இதை எதிர்த்து பக்தர்கள் குரல் எழுப்பினார்கள். இருதரப்புக்குமிடையே மோதல் முற்றியது. இந்த தகராறில் கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் அதுல் சந்திர சர்க்கார் முஸ்லிம் வெறியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ரத்தக்காயம் பட்ட அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜூன் மாதம் 23ம் தேதி இரவு ஹில்கெத் பகுதியில் உள்ள துர்கா மந்திரை முஸ்லிம் வெறியர்கள் ஆக்கிரமிக்க முற்பட்டனர். இதை எதிர்த்து பக்தர்கள் கடுமையாகப் போராடினார்கள். இதில் பக்தர்களில் சிலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் காட்டுத்தீயாக பரவியது.
கோயில் வளாகம் அருகே நூற்றுக்கணக்கானோர் குவிந்து விட்டதை அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்ற நிலை உருவானது. இதற்கிடையே காவல் ஆய்வாளர் முகமது அஸிகுர்ரகுமான் சம்பவ இடத்துக்கு காவலர்களுடன் விரைந்து வந்தார். அவரிடம் இருதரப்பினரும் மாறி மாறி புகார் கூறினர். இருதரப்பையும் சமாதானப்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்க்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட இடம் கொடுக்க மாட்டோம் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தீப்பிழம்பு கொழுந்து விட்டு எரியலாம்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி