தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர் பிரலாஹத் ஜோஷி, நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பா.ஜ.க சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளர். முன்னதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நமது தமிழக அரசியல்வாதிகள், அமைச்சர்களை போல வெற்று கூச்சல் போட்டுக்கொண்டும் அரசியல் செய்துகொண்டும் இருக்காமல், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரலாஹத் ஜோஷியை தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சிடி ரவியுடன் சென்று நேரில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறுதமிழக பா.ஜ.க சார்பாக கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.