நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம்

சீரான, நீடிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை  கட்டமைப்பதை நோக்கிய நிதி ஆயோகின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மத்திய அரசு, மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இது வழிவகுக்கிறது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கைகள் பள்ளிக் கல்வியின் அமலாக்கம், மற்றும் உயர் கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தின் விவாதப்பொருட்களில் முக்கிய இடம்பெறும். குறிப்பாகக, 2019 ஜூலை மாதத்திற்கு பின் இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது. கொரோனா பெருந்தொற்று பின்னணியில் அதற்கு எதிராக அமிர்தகாலத்திற்குள் நாம் நுழையும் நிலையிலும் ஜி 20 அமைப்பின் தலைமையேற்று அடுத்த ஆண்டு உச்சிமாநாட்டை பாரதம் நடத்தும் நிலையிலும் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிர்வாக கவுன்சிலில் பிரதமர், மாநிலங்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இடம் பெறுவார்கள்.