நாளை திருவண்ணமலையில் பஞ்ச ரத தேரோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா டிச.1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை (டிச. 7), பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தேரோட்டம்:

முதலாவதாக, காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்குகிறது.

இரண்டாவதாக வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தோ் புறப்படுகிறது.

மூன்றாவதாக, பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தோ் புறப்படுகிறது.

நான்காவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரும்,

ஐந்தாவதாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன.