“நான் யார்” – பாகிஸ்தான் இந்துக்களின் அவலநிலை

பாகிஸ்தானின் சிறுபான்மை சமூகமாக இருக்கும் ஹிந்துக்கள் பல ஆண்டுகளாக கடுமையான மனித உரிமை மீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வந்தார்கள். இதன் விளைவாக பாகிஸ்தானிலிருந்து பாரதத்திற்கு ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டனர். பாரதத்தில் தஞ்சம் அடைந்த பின்பும் அவர்களின் பிரச்சினை குறையவில்லை. பாகிஸ்தானிலிருந்து வந்ததால் களங்கபடுத்தப்படுகிறார்கள். இந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளையெல்லாம் விளக்கும் வகையில் இயக்குநர் பிரகாஷ்ஜா ஒரு படத்தை இயக்கியுள்ளார். அதில் பாகிஸ்தானில் ஹிந்து மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றிய சம்பவங்களை இந்த படம் கூறுகிறது. கட்டாய மதமாற்றம், கட்டாய திருமணம், மைனர் சிறுமிகளை கடத்தி கற்பழித்தல் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை ஆக்கியது, ஹிந்து கோயில்களின் மீது தாக்குதல் நடத்தியது. பள்ளி பாடப்புத்தங்களில் இந்து வெறுப்பு, பணத்துக்கா ஆட் கடத்தல், காவல்துறை நீதித்துறைகளில் அநீதி விழைக்கப்பட்டது போன்ற சம்பவங்களை விளக்கி கூறியுள்ளார். பாரதத்தில் தஞ்சம் அடைந்த பின்னரும் அடிப்படை தேவைகளுக்கா கஷ்டப்பட்டார்கள், அரசும் தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்கவில்லை. மேலும் உள்ளூர் மக்களும் பாடுபாடு காட்டினார்கள். பாகிஸ்தானில் சிறுபான்மை ஹிந்துக்களின் பிரச்சினைகளுக்கு மூல காரணமற்ற இந்த படம் விளக்குகிறது. பாரதத்தின் பிரிவினையிலிருந்து தொடங்கி ஒரே இரவில் பிரிக்கப்படாத பாரதத்திலிருந்து பிரிக்கப்பட்ட பாரதத்தின் குடிமக்களாக மாறினர். இதனால் பல தலைமுறைகளாக துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

பாரதம், பிரிக்கப்பட்ட நாட்டில் ஹிந்துக்களை துன்புறுத்தும் பிரச்சினையை உலகளாவிய மேடையில் எழுப்பத் தவறிவிட்டது. இதனால் அவர்கள் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக ஆகிவிட்டார்கள். பாரதத்தில் சொந்த மக்களுக்கே அடைக்கலம் கொடுக்க அகதிகள் சட்டம் இல்லை. அடைக்கலம் தேடிய மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. துன்புறுத்தப்பட்ட இந்த பாகிஸ்தான் இந்துக்களுக்கு விரைவான குடியுரிமை வழங்க மோடி அரசு அறிமுகப்படுத்திய குடியுரிமை திருத்த மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான பொய்யான மதச்சார்பற்றால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முடியவில்லை. இந்த படம் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் வாழ்க்கை பாரதத்திற்கு வந்த பின் அவர்களின் வாழ்க்கை பற்றிய கதையை விரிவாக காட்டுகிறது. ௨௦௧௬ல் வெற்றி கரமான படங்களில் இதுவும் ஒன்று. மேலும் இந்த படம் புறக்கணிக்கப்பட்ட சமுக மக்களின் வாழ்க்கை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஹவுஸ் அஃப் காமன்ஸ், யுனைடெட் கிங்டமில் ௨௦௧௮ல் நெதர்லாந்தில் ௨௦௧௭வும் மேலும் இடங்களில் திரையிடப்பட்டது.