பாரதத்தில் ஒன்றாக வாழும் பல்வேறு பிரிவினருக்கு இடையே உள்ள சமூக, நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் வெளி நாடுகளில் இருந்து தவறான, பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்படுவது தெரியவந்துள்ளது. @Babar_7860; @FMQureshipk; @ihtk1; @raufburrio; @ideowarrior; @zahrakhanpak911; @Abebeellan; @akhirhashmi159 and @rakibpatrkar போன்ற பல்வேறு டுவிட்டர் கணக்குகள் இதில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே செய்யப்படுகின்றன. பாகிஸ்தானில் ஆட்சியே தடுமாறுகிறது, அங்கு வாழும் ஷியா, அகமதியா போன்ற சிறுபான்மை முஸ்லிம்கள், ஹிந்து, கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மை பிரிவினருக்கு பெரும்பான்மையாக உள்ள சன்னி பிரிவினர் செய்யும் கொடுமைகளுக்கு அளவேயில்லை. ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறது அந்நாடு. பாரதம் அவர்களுக்கு உணவளித்து வருகிறது. அதற்கு முன்பும் பல உதவிகளை செய்தது. இதேபோல, பாகிஸ்தான் அரசிடம் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டு இருந்த வங்க தேசத்தை போரிட்டு மீட்டுக் கொடுத்தது நமது பாரதம்தான். இன்றுவரை பல்வேறு உதவிகள் இந்நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் யாரும் இது குறித்தெல்லாம் சற்றும் யோசித்து பார்த்ததாகவே தெரியவில்லை.