கங்கை மற்றும் பிற நதிகளை சுத்தம் செய்வதை ஊக்குவிக்கவும் அதனை குழந்தைகள், இளைஞர்களிடையே பிரபலப்படுத்தி அவர்களும் இதில் பங்குபெர ஊக்குவிக்கவும் மத்திய அரசு பிரபல காமிக் புத்தக கதாபாத்திரமான சாச்சா சௌத்ரியை நமாமி கங்கே திட்டத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான காமிக்ஸ், இ-காமிக்ஸ், அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்களை உருவாக்கவும் மக்களிடம் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ரூ. 2.26 கோடி மதிப்பீட்டில் டயமண்ட் டூன் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.