தேஜஸ் வாங்கும் உலக நாடுகள்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணையமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளனர். மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் ‘மிக் 29′ ரக போர் விமானங்களை ராணுவத்தில் இருந்து படிப்படியாக விலக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து பாரதம் தயாரிக்கும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் லகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது. மலேஷியா 2019லேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு ஒப்பந்தம்’ கொடுத்துள்ளது” என கூறினார்.