தேசப் பாதுகாப்புக்கு குடும்பம் கேடயம்!

இன்று தொலைக்காட்சியில் நாடு முழுவதும் அதிகளவில் மக்கள் மனதில் இடம் பிடித்த நிகழ்ச்சிகள் யாவும் பிரம்மாண்டமாய் தயாரிக்கப்படும் நமது ராமாயண, மகாபாரத women-cultureங்களே ஆகும்.

நம் முன்னோர்களின் வாழ்வியல் அதிலும்  சீதை, திரௌபதி அவர்தம் ஆளுமையால்  இன்றும் நாம் அவர்களை பூஜித்து வருகிறோம். ஆனால் அவர்களைப் போல் இன்றைய பெண்களின் நிலை உள்ளதா? இந்த முக்கியமான ஒப்பிடவே இந்த மகத்தான ஈர்ப்புக்கு அது முக்கிய காரணமாக திகழ்கிறது எனலாம்.

பாரத பெண்விடுதலை பற்றி உணர்வுபூர்வமான பாடல்களை இயற்ற வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது? ஏற்பட்டிருக்க கூடும்?

நம் தேசத்தில் ஒரு பெண் தன் வாழ்வில் மகள், மனைவி, தாய், பாட்டி என எல்லா பாத்திரங்களையும் திறம்பட வகிக்கிறாள். சமூகத்திலோ அரசியாக, அமைச்சராக, தளபதியாக, கவிஞராக, கலைஞராக, படைப்பாளியாக, ஆன்மீக அறிவொளி படைத்த ஞானியாகவும் திகழ்ந்துள்ளாள்.

பூவுலகில் மானுடம் தோன்றிய நாளிலிருந்து உள்ளும் புறமும் செழித்திருந்தது நமது பாரதத்தில் மட்டும்தான்.

அந்தோ! இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்து நம்மை நிலை குலைத்து போனார்கள். அவர்களுக்கு பணிவிடை செய்ய, உறவுக்கொள்ள, பிள்ளைகள் பெற்றுத்தர மட்டும்தான் பெண்கள் என நினைத்தனர்.

அத்தகையவர்களிடம் சிக்குண்டு பாதித்த நமது குல பெண்களை போற்றி பாதுகாக்க வேண்டிய நாட்களில் நமது முன்னோர்கள் வெகுவாக சிரமப்பட்டிருக்க வேண்டும்.

பெண்களை வீட்டினுள் பூட்டிவைப்பதும் இளம்வயது மணங்களும் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல், சுதந்தரமான  திருமண நிலைகளிலிருந்து, சொந்தத்திற்குள் மட்டுமே மணம் முடித்தல் போன்ற பாதுகாப்பான வழிகளை பின்பற்ற நேரிட்டிருக்கலாம்.

கிட்டத்தட்ட 10 நூற்றாண்டுகள் தொடர்ந்த இந்த சமூக சூழலால் பெண்களின் வாழ்வியல், உடல், மனம், சமூக பங்களிப்பு என அனைத்தும் முற்றிலும் பாரம்பரியத்திலிருந்து அந்நியப்பட்டு போய்விட்டது.

இத்தகையதொரு கட்டத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் தான் பெண்கள் மீண்டுவர பாரதி உபதேசித்து சென்றுள்ளான்.

இன்று காலங்கள் மாறிவிட்டன. காட்சிகளும் மாறி அரங்கேறி வருகின்றன.

எந்தெந்த நாடுகளெல்லாம் நம் நாட்டை கொள்ளையடித்து, மக்களை கொன்று குவித்து ஆக்கிரமிக்க கடல்கடந்து வந்தனவோ, இன்று அந்த ஆங்கில, ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் நமது கலாச்சாரமும் பண்பாடும் பாரம்பர்யமும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அதில் முக்கியமானது நமது குடும்ப அமைப்பு. அது எல்லா விதங்களிலும் மனிதனைப் பாதுகாத்து பயிற்றுவித்து,  மனம், உடல் தத்துவ ரீதியாக வளர்த்து பராமரிக்க செய்கிறது என்பதனையும் அதில் தெய்வமாக போற்றும் பெண்களின் பங்கு அதிமுக்கியமானதாக இருப்பதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடை, மொழி, உணவு, கலை, பண்பாடு, ஆன்மீகம், அறிவியல் என எல்லாவற்றையும் தங்களுக்குள் உள்வாங்கியுள்ளார்கள்.

ஆனால் நாமோ அதே விஷயங்களில் கணிசமான பின்னடைவை சந்தித்து வருகிறோம். என்பது வேதனை.

குடும்பம் என்ற வலுவான கட்டமைப்பு ஆட்டம் கண்டால் நமது நிலைமை என்னாகும்? அடிமைப்பட்டு கிடந்த காலத்தை காட்டிலும் மோசமாகிவிடும்.

இதை சரி செய்வது முற்றிலும் பெண்களின் கைகளில்தான் உள்ளது. இதற்காக அவள் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

* தனது நடை, உடை, பண்பு, கலாச்சார, விஷயங்களை தெரிந்து, புரிந்து, கடைபிடிக்க வேண்டும்.

* நமது பாரம்பரிய உணவு, சம்பிரதாயங்களில் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கவேண்டும். அவைகளை விடாமல் இருப்பதுடன் கடைபிடிக்கும் மனப்பாங்கை வளர்த்து கொள்ளவேண்டும்.

* குழந்தைகளிடமும் அதன் அருமை பெருமைகளை கூறி பின்பற்றுவதில் தகுந்த பயிற்சிகளை தரவேண்டும்.

* கல்வி, கலை இலக்கியம், அதிகாரம் ஆன்மீகம், இப்படி எல்லாவற்றிலும் பூரண சுதந்திரம் பெண்களுக்கு உண்டென்பதில் உறுதியான நம்பிக்கை வேண்டும்.

* மதமாற்றத்திற்கு உட்படும் அபாயத்திலிருந்து எச்சரிக்கையாக இருக்க பழகவேண்டும். நமது பிரச்சனைகளை ஹிந்து பெண்களிடம் மட்டுமே பகிர்ந்து தீர்வு காண உறுதி பூண வேண்டும். நம் அக்கம்பக்கத்தில் வசிக்கும் அல்லது நாம் அன்றாடம் சந்திக்கும் பெண்களின் பிரச்சனைகளை கவனித்து உதவிசெய்து நல்ல சகோதரியாக இருக்கவேண்டும்.

பெண்கள் இன்று அனுபவிக்கும் பல்வேறு இயல்பான இன்னல்களுக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல என்பதை புரிந்துகொண்டு அவர்களையும் கலாச்சார ரீதியாக மீட்டெடுக்க உறுதி பூண வேண்டும்.

ஆண்கள் கவனிக்க வேண்டியவை:

* பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை மனதார ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களின் பாதுகாப்பு, வளர்ச்சி பங்களிப்பு, இவற்றிற்கு ஆதரவாக இருக்க விரும்புங்கள்.

* குடும்பத்தில் மனைவியின் உணர்வுகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். முக்கியமாக அவரது ஆரோக்கியத்தில் கவனம் வையுங்கள்.

* பெண்களின் நிலை திரிந்தால் ஒட்டுமொத்த தேசத்திற்கே ஊறுவிளையும் அபாயத்தை என்றும்  கருத்தில் வைக்கவேண்டும்.

தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டியவை:

* குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு  முன்னுரிமை தாருங்கள்.

* குழந்தைகள் பெற்று கொள்வதை தள்ளிபோடாதீர்கள். குறைந்தது 2 குழந்தைகளை பெற்று வளர்க்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு சிறுவயது முதலே பெற்றோர்கள் நமது பாரம்பர்ய பண்புகளை எடுத்து சொல்லி கடைபிடிக்க வைக்க வேண்டும்.

* சாதி, தீண்டாமை, பெண் அடிமை என்பதெல்லாம் இடையில் வந்தவைகளே. அவற்றை எந்தக் காரணத்தை கொண்டும் நியாயப்படுத்தும் நபர்கள் அமைப்புகளுக்கு ஆதரவு தராதீர்கள்.

* நமது தேசத்தின் பாதுகாப்பு ஹிந்து மக்களின் ஒற்றுமையில்தான் உள்ளது. அதற்காக நமது குடும்பம் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என முடிவு செய்யுங்கள்.

* தம்பதிகளுக்கு பரஸ்பரம் அன்பு, மரியாதை, விட்டுகொடுப்பது, உதவியாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது என்பதை செயல்படுத்த தவறாதீர்கள். புகழோங்கிய பாரதம் மீண்டும் மலர சேதுபந்தன அணிகளாக நாமும் நம் பங்களிப்பை தருவோமாக!   டூ

 

 

நமது தேசத்தின் பாதுகாப்பு ஹிந்து மக்களின் ஒற்றுமையில்தான் உள்ளது. அதற்காக நமது குடும்பம் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *