காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அடிப்படைவாதிகள், முஸ்லிம் மதவாத கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டோரின் எதிர்ப்பையும் பல சர்ச்சைகளையும் மீறி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், 2023ம் ஆண்டின் மிகப்பெரிய தொடக்கப் படங்களில் ஒன்றாக உள்ளது. சுதிப்தோ சென் எழுதி இயக்கிய இந்த பன்மொழிப் படம், மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டதில் இருந்து தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்து 2023ம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தின் ஐந்தாவது அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் பாரதம் முழுவதும் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மெகாஸ்டார் அக்ஷய் குமார் நடித்த செல்ஃபி மற்றும் கார்த்திக் ஆர்யனின் ஷாஜதா போன்ற திரைப்படங்களை விட அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை இப்படம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் முதல் நாள் சாதனையை இப்படம் முறியடித்தது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இப்படம், பொது மக்கள் பார்வைக்கு ஏற்றது என்று தீர்மானித்தாலும், படத்தை வெளியிட தடை கோரி ஏராளமான மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், படத்திற்கு எதிரான மனுவை ஏற்க உயர் நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களும் மறுத்துவிட்டன.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் இது பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது நினைவு கூரத்தக்கது. படத்தின் கதை கேரளாவைச் சேர்ந்த அதா ஷர்மா என்ற அப்பாவி ஹிந்துப் பெண்ணாக நடித்த ஷாலினி உன்னி கிருஷ்ணனைச் சுற்றி வருகிறது, அவள் தனது முஸ்லீம் நண்பர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு முஸ்லிம் மதத்திற்கு மாறி ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொள்கிறாள். பின்னர் அந்த நபர் தனது மனைவியுடன் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்கிறார் என செல்கிறது இந்த கதை.