எல்லா உயிர்களையும் காக்கும் சிவபிரான் அவைகளால் போற்றப்படுகிறார். எல்லா உயிர்களும் இறுதியில் வந்தடையும் இலக்கான அவனது செந்தளிர் போன்ற இரண்டு திருவடிகளின் பெருமை பலப்பல.
“திருமால், நான்முகன் தேடியும் கண்டடைய இயலாத தாமரை போன்ற திருவடிகள் தங்களைக் கடைத்தேற்றுவதற்காக ஆட்கொண்டு அருளும் பொன் மலர்ப் பாதங்களாகவே கருதி மார்கழி நீராடி வந்த கன்னியர் தங்களுக்கு இத்தகைய உயர்வான பாதங்களை வந்து உய்ய வழிதரும் பேற்றைத் தந்து அருள்வாயாக” என வேண்டுகின்றனர்.
இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழிகளை இருபது பாடல்களின் மூலம் உணர்த்தும் மாணிக்கவாசகர், முத்தாய்ப்பாக, ‘தான்’ என்னும் ஆணவம் ஒழித்து, அவனுடைய பாதங்களை முழுமையாகச் சரணடைந்து விடுவதே எல்லா வழிகளிலும் ஏற்ற வழியென்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார்.