“புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்…” ஏன்று துவங்கும் திருப்பள்ளையெழுச்சிப் பாடலில், விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மிகச் சிறந்த விழுப் பொருளாக விளங்குபவன் சிவபெருமான். அத்தகைய உயர்ந்த அரிய பொருள் மண்ணுலகில் வாழும் தொண்டர்களுக்கு எளிமையாக இறங்கி வந்து அருள் செய்து வாழ வைக்கிறான். திருப்பெருந்துறை நிலவளம், நீர் வளத்தோடு உலக உயிர்கள் அருள்பெற வைக்கும் திருத்தலம். பரம்பரை பரம்பரையாக அவனது திருக்கோயிலை வலம் வந்து பரமனுக்கே பணிவிடை செய்யும் அடியவர்களின் உயிரில் கலந்து தேனாக இனிக்கிறான். அளவற்ற அருளின் பரப்பினைக் காட்டும் (நீலமணி மிடற்றான்) அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவன் அவனே இந்த உலகின் உயிர். “எம்பெருமானே! பள்ளி எழுந்தருளாயே!” என்கிறார் மாணிக்கவாசகர்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி