திருப்பள்ளியெழுச்சி பாடல் – 3

குயில், கோழி மற்றும் பறவைகள் உதயகாலத்து சூரியனைக் கண்டதும் ஆரவாரம் செய்கின்றன. சங்குகள் கோவில்களினின்று முழங்கத் தொடங்கிவிட்டன. சூரியஒளியானது நட்சத்திரத்தின் ஒளியை தன்னுள் இணைத்துக் கொள்கிறது. அதுபோல நானும் மனதினில் பரமனை மட்டுமே காண விழைகிறார் . அதனாலேயே “அடியவர்களை உன்னுடன் இணைத்துக் கொள்ளும் பொருட்டுத் திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக.” என்கிறார் மாணிக்கவாசகர்.
எல்லோருக்கும் அரியவராகவும் ஆனால் அதேநேரம்  அடியர்களுக்கு எளியவராகவும் தன்மை கொண்ட தன்னுடைய தலைவனான திருப்பெருந்துறை சிவபெருமானைப் பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக என்றும் வேண்டுகிறார். அடியார்களின் உண்மையான அன்பிற்கு இரங்கி எளிமையாகக் காட்சியருளும் இறைவனை அடைய பூரண சரணாகதியே வழி என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.