திருச்சி திருட்டு, திருவாரூர் திருடர்கள்,எரியுதாம் வீடு எரிவார்களாம் சோறு

லலிதா ஜுவல்லரி எனும் பிரபல நகைக் கடையின் திருச்சி கிளையில் திருவாரூர் திருடர்கள் காட்டிய கைவரிசை ஊடகங்களில் பரவலாக பார்க்கப்பட்டதில் நமக்குள் பல கேள்விகள் எழுந்தாலும் நமது கவனம் முழுவதும் வேறு திசையில் தான் செல்கிறது.
‘வட நாட்டுக் கொள்ளையர்கள்’ என்ற விஷமத்தனம் முதலில் தலைகாட்டியது. அடுத்து பிடிபட்ட கொள்ளையன் மணிகண்டன் பாஜகவைச் சேர்ந்தவன் என்ற புரளி! இதுபோல சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்படும் புரளிகள் பெரும்பாலும் திட்டமிட்ட அவதூறுகளாகவே இருக்கின்றன.
திருவாரூர் கொள்ளையர்களில் ஒருவனான மணிகண்டன் மன்னார் குடி திவாகரனுக்குப் பொன்னாடை போர்த்துவது போன்ற படத்தில், திவாகரன் இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா முகத்தைப் பொருத்தி ஜோடிக்கப்
பட்ட படத்தை சென்னை ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த “ஆர்.கே.நகர் சயீத்”
(R. K. NAGAR SYED) என்ற காங்கிரஸ் பிரமுகர் தனது முகநூலில் பதிவேற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் “வெளிச்சம்” சமூக வலைதளம், திமுகவின் ”DMK 4TN” என்ற முகநூல் பக்கம் ஆகியவை பொய் பரப்பின.
இதை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா (டி.ஆர். பாலுவின் மகன்) பகிர்ந்தார். சமூக வலைதளத்தில் இதற்குக் கடும் கண்டனம் எழுந்தவுடன் “பாஜக ராஜா” மீதான அவதூறான பதிவை “திமுக ராஜா” நீக்கிவிட்டார்.
மேற்குறிப்பிட்ட நபர்கள், முகநூல் பக்கங்கள் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் வசம் ஹெச்.ராஜா புகார் அளித்தார். ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டும். திருவாரூர் திருடர்களுக்குப் பல திருட்டுக்களில் தொடர்புண்டு. அவர்கள் திட்டமிட்டுச் செயல்படும் பலே திருடர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *