ஸ்ரீராமபிரானின் பூரண அருளைப் பெற, அனைவரும் தினமும் முடிந்த அளவுக்கு ‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற தாரக மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்று சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்தி தரும் புனிதத் தலங்களாக குறிப்பிடப்படும் 7 இடங்களில் ஒன்றான அயோத்தியில் ராமபிரான் அவதரித்துள்ளார். அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜன. 22-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்துக்கள் அனைவரும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும், ஸ்ரீராமபிரானின் அருளைப் பரிபூரணமாகப் பெறவும் தினமும் முடிந்த அளவுக்கு, ‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற தாரக மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்று சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.