தானோட் கோயில் எல்லை சுற்றுலா மேம்பாடு

ராஜஸ்தானுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள பாரத பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய தானோத் கோயில் வளாகத்தில் எல்லை சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தானோத் கோயில் வளாகத் திட்டத்திற்காக மத்திய அரசால் 17 கோடியே 67 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாவை மேம்படுத்த காத்திருப்பு அறை, ஆம்பி தியேட்டர், விளக்க மையம், குழந்தைகளுக்கான அறை மற்றும் பிற தேவையான வசதிகள் உருவாக்கப்படும். 1965ல் பாரத பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானின் தனோத் ராய் மாதா கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகள் பாகிஸ்தானால் வீசப்பட்டன. ஆனால் அவை எதுவும் தனோத் மாதாவின் அற்புதத்தால் வெடிக்கவில்லை. 1965 முதல், எல்லை பாதுகப்புப் படை, இந்த கோயிலின் வழிபாடு மற்றும் ஏற்பாடுகளை பொறுப்பேற்று செய்து வருகிறது. இந்த கோயிலை ஒரு அறக்கட்டளை மூலம் எல்லை பாதுகாப்புப்படை நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் கோயிலில் ஆரத்தி மற்றும் பஜனை ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தானோத் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சுற்றுலா வாய்ப்புகளைப் பற்றி ஆய்வு செய்தார்.