தமிழை போற்றிய பிரதமர்

தமிழகத்திற்கு வரும்போது மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் உலக அளவிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழையும் தமிழக வரலாற்றையும் அதன் பாரம்பரிய கலாச்சார பெருமைகளையும் பிரதமர் நரேந்திர மோடி போற்றி புகழ்ந்து வருகிறார். அவ்வகையில், நாடெங்கிலும் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். அது தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், “உலகின் மிகவும் பழமையான மொழி எந்த நாட்டில் உள்ளதோ அந்த நாடு பெருமை கொள்ள வேண்டுமா இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி உலகின் மிகத் தொன்மையான மொழி எனது நாட்டில் உள்ளது என கூற வேண்டுமா இல்லையா? உங்களுக்குத் தெரியுமா? நமது தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. முழு உலகிலும். இவ்வளவு பெரிய பெருமை நமது நாட்டிடம் உள்ளது. இவ்வளவு பெரிய கௌரவம் பாரதத்திடம் உள்ளது. நாம் நெஞ்சை நிமிர்த்தி உலகிடம் சொல்ல வேண்டும் அல்லவா? நான் கடந்த முறை ஐ.நாவில் பேசினேன். நான் தமிழை கற்றுக்கொண்டு அங்கு பேசினேன். ஏனெனில் நான் உலகத்திற்கு கூற விரும்பினேன். எனக்கு பெருமையாக உள்ளது. உலகின் பழமையான தமிழ் மொழி, தொன்மையான தமிழ் மொழி எனது நாட்டில் உள்ளது என்பதில் எனக்கு பெருமை” என கூறினார்.