தமிழக அரசு என்ன செய்ய போகிறது?

போராளியை மீட்க வாரீர்’ என தமிழக முஸ்லிம்களை திரட்டி கோவை மத்திய சிறைச்சாலை முன் போராட்டத்தை முன்னெடுக்க தேதி குறித்துள்ளது இந்திய தேசிய லீக் கட்சி.

இவர்கள் கூறும் போராளி ‘கோவை பாட்சா’. இவர் ஒன்றும் தேச விடுதலைக்கோ, மக்கள் உரிமைக்காகவோ, உலக சமாதானத்திற்காகவோ போராடி சிறை சென்றவர் அல்ல.

கோவை குண்டு வெடிப்பு, ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்த்தி நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஒரு பயங்கரவாதியை தான் அவர்கள் போராளி என்கின்றனர்.

பயங்கரவாதியை ஒரு தலைவனாக, போராளியாக சித்தரிப்பது என்பது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம்.

நம் தமிழக அரசு இந்த போராட்டத்திற்கு தடை விதிக்காமல், கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. ஒருவேளை, இவர்கள் போராட்டம் எனும் பெயரில் முன்பு நிகழ்த்திய ஆம்பூர் கலவரம், அமெரிக்க தூதரக கலவரம் போன்ற வன்முறைகள் எதையாவது நிகழ்த்திய பிறகு சாவகாசமாக செல்லலாம் என காத்திருக்கிறதா?

வர்மா கைது: இதே குற்றத்திற்காக போலீசாரால் சுட்டுகொல்லபட்ட பயங்கரவாதி இமாம் அலியை தியாகியாக சித்தரித்து விளம்பரம் செய்த இந்திய தேசிய லீக் கட்சி தலைவர்கள், பாரத பிரதமரை கொச்சையாக பேசியவர்கள், ராமர் கோயிலை குண்டு வைத்து தகர்ப்பேன் என்றவர்களை எல்லாம் கைது செய்யாத காவல்துறை, ‘பயங்கரவாதத்தை தங்கள் மதம் ஒத்துக்கொள்வதில்லை என கூறுபவர்கள், பயங்கரவாதிகளை தங்கள் மதத்தில் இருந்து ஏன் நீக்குவதில்லை’ என டிவிட்டரில் கருத்து பதிந்த ஓவியர் வர்மாவை மட்டும் கைது செய்துள்ளது ஏன் என்பதுதான் நமக்கு புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *