“தமிழக அரசியலை புரட்டிப்போடும் யாத்திரை” – அண்ணாமலை நம்பிக்கை

தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையின் 190-வது நாள் நடைபயணம் நேற்று திருத்தணி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
திருத்தணியில் முருகன் கோயில் மலை பாதை சந்திப்பு பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கிய அண்ணாமலை சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து நகராட்சி அலுவலகம் அருகே நிறைவு செய்தார். கரகாட்டம், பம்பை மேளம், கேரள செண்டை மேளம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நிகழ்வுகளுடன் நடைபெற்றது. தமிழகத்தில் பாஜக முதல் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது, ’என் மண், என் மக்கள்’ யாத்திரை மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.
இந்த யாத்திரை, தமிழகத்தின் அரசியலை அடியோடு புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையோடு நடந்துக் கொண்டிருக்கிறது என்று அப்போது அண்ணாமலை பேசினார். தொடர்ந்து, நேற்று மாலை திருவள்ளூர் சி.வி.என்.சாலை முதல் வடக்கு ராஜ வீதி சந்திப்பு வரை யாத்திரை நடைபெற்றது.