இளம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடியதில் துவங்கிய ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்புப் போராட்டம் வன்முறைக் குழுக்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானதல்லவா? நம்முடைய கேள்வியெல்லாம், ‘தமிழனாக இரு! தமிழ் உணர்வோடு இரு!’ என்று சொன்னது ஹிந்துக்களுக்கு மட்டும் தானா? அதனால்தான் அவர்கள் மத உணர்வு, ஜாதி உணர்வை மறந்து தமிழனாக கூடினார்களா?
மாறாக, முஸ்லிம்களுக்கு மட்டும் முஸ்லிம் உணர்வே மேலோங்கி இருந்ததால், தமிழனாக அனைவரோடும் கலக்காமல், இஸ்லாம் என்ற தனித்தன்மையோடு தொப்பி தாடியோடு நமாஸ் செய்தார்களா? இதுதான் மதசார்பற்ற தன்மையா? இவர்களுடைய தயவிலே நோட்டு மதிப்பிழப்பு ஆணையை அடுத்து ரெய்டுக்கு உள்ளான புகாரி ஓட்டலிலிருந்து தினசரி 10,000 பொட்டலம் பிரியாணி சப்ளை செய்யப்பட்டதா? லட்சம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் அந்த பிரியாணி யார் யாருக்கு மட்டும் வினியோகிக்கப்பட்டது?
மாநில முதலமைச்சர் பன்னீர்செல்வம், பாரதப் பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்த பின்னர் கூட்டம் கலையத் தொடங்கியவுடன், அதைக் கலையவிடாமல், மே 17 இயக்கத்தின் தேசவிரோத திருமுருகன் காந்தி, மோடிக்கு எதிராக ஒருமையில் உரை நிகழ்த்தி, கூட்டத்தை திசை திருப்ப, அதை நேரடியாக ஒளிபரப்பி, மக்கள் உணர்வுகளை தூண்டிய நியூஸ் 7 போன்ற டிவிக்கள் சமூக பொறுப்புள்ளதா?
அதிமுகவை வீழ்த்த ‘கரம்’வைத்து அலைகிறது நியூஸ் 7. இடதுசாரி, தனித்தமிழ்நாடு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஓடி ஆடி உழைத்தது நியூஸ் 7 நிர்வாகமே! இதற்காக பெருந்திரளாக நியூஸ் 7 பயன்படுத்தியது தமுமுக, குஈகஐ என்ற தேசவிரோத, இயக்க நிர்வாகிகளை.
இதற்கு கொஞ்சம் கூட சளைக்காமல், அதி தீவிர தேச விரோதத்தில் இயங்கியது நியூஸ் 18 தொலைக்காட்சி. சன் டிவி, கலைஞர் டிவிக்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் புரியாத புதிர் புதிய தலைமுறை டிவி தான். வன்முறையாளர், தேச விரோத ஆதரவாளர் நிலைப்பாட்டை சனிக்கிழமை மாலை வரை (பன்னீர் அவசர சட்டம் கொண்டுவரும் வரை) புதிய தலைமுறை மாற்றவே இல்லை!
அவசர சட்டம் அறிவித்த பின்பு உண்மையான போராட்டக்காரர்கள் வெளியேறியது ஏன்?
7 நாள் போராட்டத்தில் 3ம் நாளே போராட்டம் தேசவிரோத கும்பல் கைக்கு போய்விட்டதை ஹிப் ஹாப் ஆதி, லாரன்ஸ் ராகவேந்திரா, ஜல்லிக்கட்டு போராட்டக்குழு, ராஜசேகர், சேனாதிபதி உணர்ந்தார்கள். ஆனால் போராட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி இருந்தது.
வீரத்தமிழச்சி என்ற அடைமொழியோடு இருந்த பெண், அவருக்கு பின்னாலிருந்த பெண்கள், இரண்டு நபர்கள் ஆகியோர் ஸ்டாலினோடு நிற்கும் பழைய படம் வாட்ஸ் அப்பில் வெளியாகி திமுக ஊடுருவலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
முதலில் கிக் ஏற்றும் பேச்சுகளை ஒளிபரப்பிய டிவிக்கள், பின்னாலே நிறுத்த முயன்றபோது (ஒரு சில டிவிக்கள் மட்டும்) வன்முறையாளர்கள், அந்த டிவி கேமராக்களை அடித்து நொறுக்கினார்கள். பயத்தில் மீண்டும் அந்த மாதிரி ஒளிபரப்பு துவங்கப்பட்டது.
இதை கண்ணுற்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அவசர சட்டம் அறிவித்தவுடன், இதுதான் சமயமென்று வெளியேறியதுடன், உண்மையையும் உடைத்துவிட்டு சென்றார்கள். இவர்களோடு நடுநிலையாளர் கூட்டமும் வெளியேறியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் லாரன்ஸ் ராகவாவுடன் மாணவர் போர்வையில் இருந்த இருவர் பெயர், ஜலீல், ஜின்னா. இவர்கள் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்காத 40 வயது இளைஞர்களாம்!
மெரீனாவில் தேச விரோத தியாகுவிற்கும் திராவிடர் கழக ஹரி பரந்தாமனுக்கும் என்ன வேலை? சட்டத்தை விளக்க வந்தார்களாம்! யார் கூப்பிட்டது? இவர்கள் பேசியவுடன் மிச்ச சொச்ச கூட்டம் கலைந்தது என்றால், கூட்டத்தினரின் பின்புலம் என்ன? உண்மை இப்போது தெரிந்ததல்லவா?
சங்க அமைப்புகள்
இப்போராட்டத்தில் சங்க அமைப்புகளின் பங்கு என்ன? எல்லா ஊர்களிலும் ஜனவரி 8 ஆர்ப்பாட்டத்தை துவக்கி ஜனவரி 13 வரை அமைதியாக ஏபிவிபியுடன் இணைந்து, பாஜகவினர் நடத்தினார்கள்.
மெரினா, பல்வேறு ஊர்களில் நடந்த போராட்டத்தில் ஏபிவிபியினர் தேசியக் கொடியுடன் வந்தே மாதரம் கோஷத்துடன் வலம் வந்தபோது, எஸ்.டி.பி.ஐயினரால் தாக்கப்பட்டு அடித்து விரட்டப்பட்டனர். கோவையில் பல ஏபிவிபியினர் படுகாயம் அடைந்தனர்.
மெரீனாவில் கலந்துகொண்ட 11ம் வகுப்பு மாணவர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ்ஸின் தென் தமிழக பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் சேதுராமனின் சகோதரர் மகன், கடலில் மூழ்கி இறந்தான்.
இதுபற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிட வில்லை. மாறாக ஐஸ்ஹவுஸில் இரண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்து 500 அரசு பஸ்களை உடைத்த தேச விரோதிகளுக்கு ஆதரவாக பிரகாஷ் காரத்தும் திருமாவளவனும் திருநாவுக்கரசரும் நீதி விசாரணை கோருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு மேனகா காந்தி எதிர்ப்பு, விலங்கு நலவாரியம் எதிராக மனுதாக்கல் என பொய் செய்தி வெளியிட்டு, அது உண்மை அல்ல என்று தெரிந்தபிறகும் மறுப்பு வெளியிட மறுக்கின்றனர்.
இப்போது மீண்டும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கிவிடும் என அவதூறு பரப்புகின்றனர்.
இத்தனை ஒருதலைபட்சமான, பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு செய்திகள் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் சுற்றி வருகிறது.
ஆனால் நெருப்பு, எத்தனை கசண்டுகள் வந்தாலும் எரித்துத் தள்ளும், எத்தனை பொய்யை தூக்கிப் போட்டாலும் எரிக்குமே தவிர அணையாது. தேசிய சக்தி என்ற உணர்ச்சிப் பிழம்பின் உள்பலம் அது!
நேரடி அனுபவம்
ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் துள்ளிக் குதித்தேன். நண்பர்கள் அனைவருக்கும் அலைபேசியின் மூலம் என் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன். அன்றிரவு அந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக கடற்கரை சென்ற நான் அங்கு பார்த்த காட்சிகள் என் மனதை புண்படுத்தியது. தேசியக் கொடியுடன் வந்த சில மாணவர்களை தாக்க முயற்சிக்கும் சிலர் கொடியைப் பிடுங்கி, அதை கீழே போட்டு மிதிக்க முயற்சித்த போது தேசியக் கொடியைக் காப்பாற்ற முயன்ற மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களின் இந்த செயலால் எனக்கு ஒரு சந்தேகம். மாட்டுக்கறி விருந்து வைத்து அதை சாப்பிடும் இவர்களுக்கு ஜல்லிக்கட்டுக்காக போராடுவதற்கு என்ன தகுதி? ஒன்று தெளிவாக புரிகிறது. மக்கள் உணர்வுகளை மதித்து, நல்லவர்கள் மக்களை அவர்களுடன் இணைத்து, தேசப்பணியில் ஈடுபடவில்லை என்றால் தீய சக்திகள் அதைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றன. – தமிழ் மணியன்