தமிழகத்தை சேர்ந்த 8வயது சிறுவன் உலக வில் அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை

தமிழகத்தின் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த முத்துகுமாரன்_நிஷாராணி தம்பதியர்களின் மகன் 8வயது சிறுவன் ஜீவன்ஷிவா அனைத்து உலக வில் அம்பு ஏய்தும் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 28-30தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தியா இந்தோனீசியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான 20மீட்டர் வில் எய்தும் போட்டி நடைபெற்றது. இதில் 10வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் ஜீவன்ஷிவா முதலிடம் பெற்று #தங்கம் வென்று உலகசாதனை படைத்துள்ளார்.

இவர் பல்வேறு போட்டியில் பங்கேற்று 30க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளார் .மேலும் கடந்த ஆண்டு 7வயதில் 7மணி நேரம் தொடர்ந்து வில் அம்பு எய்து தமிழ்நாடு இளம் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வாங்குவதே இவர் இலட்சியம் என்று கூறியுள்ளார் நம் இளம் சாதனையாளர் ஜீவன் ஷிவா.

உன்னை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது தம்பி..வரும் கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று முன்னால் குடியரசு தலைவர் இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் ஐயா அப்துல்கலாம் சொன்ன வார்த்தை வீண்போகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *