தமிழகத்தில் முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை கழ(ல)கங்கள் எதிர்ப்பது ஏன்?

நாடு முழுமைக்கும் மோடி அரசு அறிமுகப்படுதிய  ‘முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான’ இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் தி மு க உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் தீவிரமாக எதிர்க்கின்றன . சமூக நீதி பாதிக்கப்பட்டு விடக்கூடாதாம். காரணம் சொல்கிறார்கள்! நாடு முழுவதும் இடஒதுக்கீடு 50% சதவீதத்தை  தாண்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இவர்கள் 69% இடஒதுக்கீடு செய்யலாம், அதனை பாதுகாக்க சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலை பெறலாம். ஆனால் நாட்டில் முற்பட்ட வகுப்பில் உள்ள ஏழைகள் எந்த ஒருசட்டம் மூலமும் பயனடைந்துவிட கூடாது! அப்படி பயனடைந்தால் இவர்களின் சமூக நீதிக்கு இடையூறாம் . அதுசரி இவர்கள் காலம் காலமாக எதிர்த்து வரும் பிராமணர்கள் பயனடைந்து விடுவார்கள் என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்த எதிர்ப்பு கூச்சல்கள்.

 பெரும்பாலும் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் ஒன்று பார்த்தால் சைவவேளாளர் ,பிள்ளைமார்  செட்டியார்  முதலியார் நாயுடு ,ஆச்சாரி என்று பல்வேறு ஜாதிக்காரர்கள் உள்ளனர். பிராமணர்கள் மட்டுமே பயனடைய போவதில்லை. இந்த திராவிட கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலும் இந்த ஜாதிகளில் இருந்தே வந்துள்ளார்கள்  இவர்களின் பெரும்பாலான ஆதரவாளர்களும் இந்த குறிப்பிட்ட ஜாதியினரே . ‘சமூகத்தில் காவலர்களின் மனதின் அடியாழத்தில் நிறைந்துள்ள துவேஷத்தின்  அடையாளமே இந்த எதிர்ப்பு. உண்மையில் இந்த இட ஒதுக்கீட்டால் ஹிந்துக்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என்ன பல்வேறு சமூக மக்களும் பயனடைவார்கள் . ஏற்றிவிட்ட  ஏணியை தள்ளிவிடுவது போல தாங்கள் இந்த நிலைக்கு வர காரணமான சமூக மக்களில் ஏழைகளை பயனடைய முடியாமல் செய்வது இந்த குழுக்களின் மிதமிஞ்சிய ஆணவத்தையே  காட்டுகிறது.

#முற்பட்ட_வகுப்பில்_ஏழையாகப்_பிறப்பது_பாவமா?
தமிழக அரசியல்வாதிகளின் பிரச்னை உண்மையிலேயே சமூகநீதி தானா?

#முற்பட்ட_வகுப்பில்_ஏழையாகப்_பிறப்பது_பாவமா?

கீழ்க்கண்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு (பொருளாதார ரீதியாக பிற்பட்ட -முற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு) வழங்கக் கூடாது என்று திமுக, கம்யூனிஸ்ட் ,விசிக போன்ற கட்சிகள் கூறியுள்ளன. இதில் தங்களுடைய ஜாதி இருக்கா ?

அச்சு வெள்ளாளர்,
ஆதி சைவர் ,
ஆற்காட்டு முதலியார்,
ஆற்காட்டு வெள்ளாளர்,
பேரி செட்டியார்,
போகநாட்டு ரெட்டியார்
பிராமணர்,
சோழபுரம் செட்டியார்
தேவதிகர் ,
எழுத்தச்சர்,
ஞானியர்,
ஜைனர்,
கடையத்தார்,
கதுப்பத்தான்
கம்மவார் நாயுடு,
கார்காத்தார், காசுக்கார ஆச்சாரி
காயல் செட்டி
கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்)
கொண்டியர்
கொங்குச் செட்டியார்
கொங்கு நாயக்கர்
கொங்கு ரெட்டியார்
கொந்தல வெள்ளாளர்
கொட்டைக்கட்டி வீர சைவம்
கோட்டைப்புரச் செட்டியார்
கோட்டைப்புர வைசியச் செட்டியார்
குக வாணியர்
மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்)
மொட்டை வெள்ளாளர்
மூசிக பலிஜகுலம்
நாடன் (நாட்டார்)
நாயர் (மேனன், நம்பியார்)
நாங்குடி வெள்ளாளர்
நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்)
ஒருகுண்ட ரெட்டி
பணிக்கர்
பத்தான் (பட்டானி), கான் ,ராஜபீரி
ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார்
ராவுத்த நாயுடு
சைவச் செட்டியார்
சைவ ஓதுவார்
சைவப் பிள்ளைமார்
சைவ சிவாச்சாரியார்
சைவ வெள்ளாளர்
சானியர்
க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி)
திருவெள்ளறைச் செட்டியார்
திய்யர்
தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்
உலகமாபுரம் செட்டியார்
வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்)
வெள்ளாளப் பிள்ளைமார்
வெள்ளாளர்
வெள்ளாளர்
வாரியர்

உங்களுக்கு எதிரான கட்சி தமிழகத்தில் எது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *