தமிழகத்தில் சகோதர அமைப்புகளின் சாதனைகள்

‘கண்டது கானல் நீர்தான்’ என்பதை உணர்ந்தார்கள்

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகிலுள்ள கடற்கரை மீனவ கிராமம் கூத்தன் குழி. சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்த ஊரில் ஒரு ஹிந்து கூட கிடையாது. அனைவரும் ஆர்.சி. கிறிஸ்தவர்கள். அங்கு வரிசையாக பல பாதிரியார்களின் நடைமுறைகள் பிடிக்காததாலும், சமாதானத்தை போதிக்கக் கூடிய பாதிரியார் பிரிவினையை உண்டாக்கி அதனால் தனக்கு லாபம் தேடிக் கொள்வதையும் எண்ணி மனம் நொந்தனர். தாய்மதமாம் ஹிந்து மதத்திற்கு திரும்ப வர ஆசைப்பட்டு ஹிந்து முன்னணியினரிடம் தொடர்பு வைத்து அவர்கள் உதவியுடன் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களைச் சேர்ந்த பெரியவர்களைச் சந்தித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

கடந்த 13.11.87 அன்று, சுமார் 400 வருடங்களுக்கு முன்பு ஒட்டு மொத்தமாக மதம் மாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களான அந்த ஊரில் ஆலயம் அமைத்து ஸ்ரீ முருகப் பெருமானின் விக்கிரகம் கோலாகலத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாலையில் நடந்த விழாவில் 23 குடும்பத்தைச் சேர்ந்த 103 பேர் தங்கள் பெயர்களை ஹிந்து பெயர்களாக மாற்றம் செய்து தீட்சை பெற்றனர். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அனைவருக்கும் தலையில் மாவிலையால் நீர் தெளித்து தீட்சை செய்து வைத்தார். வெள்ளிமலை சுவாமி மதுரானந்தஜி மஹராஜ் ஆசியுரை வழங்கினார். அதற்கான ஏற்பாடுகளை விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னின்று செய்தது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில அமைப்பாளர் வேதாந்தம், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சா. ஜெயராஜ், கூடன்குளம்

விஜய பாரதம் 1987

மயானத்தில் சில சாத்தான்கள்

மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு வடக்கே ஹிந்துக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இதற்கு வழியிலேயே கிறிஸ்தவர்களின் கல்லறை சுடுகாடும் உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு கல்லறைகள் அமைக்க போதிய இடமின்மையால் பக்கத்திலிருந்து ஹிந்துக்களின் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையையும் சுற்றி இருந்த இடத்தையும் ஆக்கிரமித்து கற்களை நட்டு வேலி போட்டனர். மயானம் செல்லும் பாதையை கிறிஸ்தவர்கள் மூடிவிட்டதால் அவ்வழியாக நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் திண்டாடினர். இதை கேள்விப்பட்ட இந்து முன்னணி தலைவர் சங்கிலி ராஜ், செயலாளர் சந்திரசேகர் மற்றும் ரமணி கணபதி,  ஸ்ரீகாந்த், தங்கராஜ் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர். பின் ஊர்ப் பிரமுகர்
களிடம் கிறிஸ்தவர்களின் விஷமச் செயல்கள் தெரிவிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற உப தலைவர் R.Q.   நாகராஜன்  மயானத்திற்கு நேரில் சென்று கிறிஸ்த
வர்கள் நட்ட கற்களை பிடுங்கியெறிந்து பாதையை செப்பனிட உத்தரவிட்டார்.

ஹிந்துபுத்திரன், ஆண்டிபட்டி

என்றும் மறக்கமுடியாத பதில்

எத்தனையோ பேரிடம் எத்தனையோ நல்ல குணங்கள்! பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். மகிழ்ச்சியும் ஏற்படும்.

அப்படி நடந்த சம்பவம் இது. நாட்டில் நெருக்கடி நிலைமை காலத்தில் பேச்சுச் சுதந்திரம் இல்லை. பத்திரிகையில் உண்மையான செய்திகள் வராது. மிசா சட்டம்! யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம் சிறையில் வைக்கலாம். நீதிமன்றம் சென்று ஜாமின் கோர முடியாது. எங்கும் அவநம்பிக்கை! நாட்டிற்கு இந்திரா காந்தியினால் ஏற்பட்ட ஆபத்து இது.

பிரச்சினைகள் வந்தால் தைரியமாக அதை எதிர்க்கும் பழக்கமும், பயிற்சியும் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நெருக்கடியை எதிர்த்து தலைமறைவு இயக்கம் நடத்தியது. அதன் மூலம் மக்களுக்கு உண்மையான செய்திகள் கிடைக்க நாடு முழுவதும் ஏற்பாடு செய்தது. மக்களை இணைத்து நாடு தழுவிய அளவில் மாபெரும் சத்தியாகிரஹம் செய்தது.

சத்தியாகிரஹத்திற்காக ஸ்வயம்சேவகர்களின் மனதைத் தயார் செய்ய சிறுசிறு கூட்டங்கள் ஏற்பாடு ெசய்யப்பட்டன.

அப்படி ஒரு குழுவில் வந்த ஒவ்வொருவரிடமும் சத்தியாகிரஹம் செய்தால் தனிப்பட்ட முறையில் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்பது பற்றிச் சொன்னேன். சிறையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டியது இருக்கும் என்று சொல்ல முடியாது. படிப்பு பாதிக்கும், தொழில் பாதிக்கும், வீட்டிலுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி சத்தியா
கிரஹத்திற்குத் தயாரா என்று கேட்டேன்.’’ ஒவ்வொருவரின் மனஉறுதியையும் பார்த்து எனக்கு மகிழ்ச்சிதான்.

குழுவில் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். 15 வருடங்களாக அந்த வேலையில் இருக்கிறார். அவரிடம் கேட்டேன். “சத்தியாகிரஹம் செய்தால் உங்கள் வேலை போகலாம். அப்பொழுது என்ன செய்வீர்கள்?”. “வேலை போனால் போகட்டும் எனக்குப் பொழைக்க வழி தெரியும். சிலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து குடும்பத்தை காப்பாற்றுவேன்” என்றார் அவர்.

அடுத்தவரிடம் கேட்டேன்: “என்ன சுந்தரபாபு! உங்கள் வீட்டின் கஷ்டமான நிலைமை எனக்குத் தெரியும். நீங்கள் எப்படி சத்தியாகிரஹம் செய்ய முடியும்?”

“நான் திடீரென இறந்து விட்டால் வீட்டிலுள்ளவர்கள் என்ன செய்வார்கள்?”- இது அவருடைய பதிலாக இருந்தது. அவர் சத்தியாகிரஹம் செய்தார்; சிறைவாசமும் அனுபவித்தார்.

தகவல் − சிவராம்ஜி ஜோக்லேக்கர்

(சங்கத்தின் மூத்த பிரச்சாரக்)

–  25 டிசம்பர் 1987  விஜயபாரத   இதழிலிருந்து)

– தொடரும்.