தப்பியோடிய கே.டி ஜலீல்

கேரள சட்டமன்ற எம்.எல்.ஏ.வும், முதல் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அமைச்சகத்தின் முன்னாள் உயர்கல்வி அமைச்சருமான கே.டி ஜலீல், ஆகஸ்ட் 12ம் தேதி தனது முகநூல் பதிவில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது ஆசாத் காஷ்மீர் என்றும் ஜம்மு காஷ்மீர் என்பது பாரத அரசு ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்” என்ற தேச விரோத அறிக்கையை வெளியிட்டார். மேலும், ஜம்மு காஷ்மீரை பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக சேர்ப்பதற்கு ஷேக் அப்துல்லா தான் திட்டமிட்டார். சுதந்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயர்கள் காஷ்மீரை இரண்டாகப் பிரித்தனர் என்று வரலாற்றை திரித்து அப்பட்டமான பொய்யைப் பரப்பினார். இதுகுறித்து பா.ஜ.கவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி  நீதிமன்றம் விசாரணை செய்தது. டெல்லி திலக் மார்க் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஜலீலின் தேச விரோத முகநூல் பதிவு மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து தப்பியோடிய கேரள சட்டமன்ற உறுப்பினர் கே.டி.ஜலீல் கேரளாவுக்கு சென்றுவிட்டார். கேரளாவில், அவருக்கு கவலை இல்லை, ஏனென்றால், அவர் கேரளாவில் உள்துறை மற்றும் காவல்துறைக்கு தலைமை தாங்குப்வர் அம்மாநில முதல்வரும் சி.பி.எம் கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தான். இதனிடையே, தனது பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி முகநூல் பதிவை வாபஸ் பெற்ற ஜலீல், இதுவரை அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பதும் சம்பந்தமே இல்லாமல், நேரு ‘ஆசாத் காஷ்மீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்று கருத்து தெரிவித்ததும் வேறு விஷயம்.