காஷ்மீரி பண்டிட்டான ஆர்த்தி டிகூ ஒரு பத்திரிகையாளர். டிசம்பர் 15ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், காஷ்மீரில் வாழும் தன் சகோதரனுக்கு அங்குள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என தனது ஒரு பதிவை போட்டார். இதனையடுத்து டிசம்பர் 17ல் அவரது கணக்கை டுவிட்டர் இந்தியா நிறுவனம் முடக்கியது. இதுகுறித்து ஆர்த்திக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், தனது சகோதரருக்கு ஜிஹாதிகளால் மிரட்டல் வந்ததாகக் கூறிய டுவிட்டர் பதிவை அவர் நீக்கினால் மட்டுமே மீண்டும் அவர் தனது கணக்கை திறந்து பயன்படுத்த முடியும். இனம், தேசம், தோற்றம், பாலின அடையாளம், மத அடையாளம், மதம், வயது, இயலாமை அல்லது தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் மற்றவர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆர்த்தி டிகூ, ‘அப்படி எந்த பதிவையும் நான் இடவில்லை, எனது சகோதரனுக்கு உள்ள மரண அச்சுறுத்தல் குறித்து மட்டுமே அதில் பதிவிட்டேன்’ என கூறியுள்ளார்.