ஜபாட் 2021 போர் பயிற்சி

ரஷ்யாவில் இன்று முதல் செப்டம்பர் 16 வரை ஜபாட் 2021 என்ற பன்நாட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பாரதம், ரஷ்யா, மங்கோலியா, ஆர்மீனியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், செர்பியா, பெலாரஸ் நாடுகள் பயிற்சியில் பங்கேற்கின்றன. பாகிஸ்தான், சீனா, வியட்நாம், மலேசியா, வங்காளதேசம், மியான்மர், உஸ்பெகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக பங்கேற்கின்றன. இதில் பாரதத்தின் சார்பில் நாகா பட்டாலியனை சேர்ந்த 200 பேர் கொண்ட ராணுவக் குழு பங்கேற்கிறது. நாடுகளிடையே பரஸ்பர ராணுவம் மற்றும் தொழில் நுட்ப உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த போர் பயிற்சி நடத்தப்படுகிறது.