பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களிலும், லக்னோவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டில்லி, குருகிராமில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரியல் எஸ்டேட்’ தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சோதனையின் போது, அவரும் அவரது நண்பர்களும் இணைந்து வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை 20 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனுசூட் போலியான நிறுவனங்களிடம் இருந்து போலியாக கடன் வாங்கி கணக்கில் வராத பல சொத்துகள் சேர்த்து உள்ளார் என கூறப்பட்டுள்ளது.