இயற்கைக்கும், சனாதன தர்மத்துக்கும் இடையிலான பிணைப்பு நெடுங்காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பந்தம் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வருகிறது.
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் `தி இன்ஸ்ட்டிடியூட் பார் தி இம்பேக்ட் ஆஃப் பெய்த் இன் லைப்’ (The Institute for the Imbact of Faith in Life) (வாழ்க்கையில் பாரம்பரிய நம்பிக்கை ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஆய்வு நிறுவனம்) சுற்றுச்சூழலை பராமரிப்பதிலும், அதை முன்னெடுத்து செல்வதிலும் எந்தெந்த மதத்தினர், எந்தெந்த வகைகளில் செயல்படுகின்றனர் என்பது குறித்து 2 கட்டங்களாக ஆய்வு நடத்தியது.
முதல்கட்ட ஆய்வு அளவீடு சார்ந்தது. 2ம் கட்ட ஆய்வு தர நிர்ணயம் சார்ந்தது. பருவ நிலை மாற்றம் காரணமாக உலகில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. விரும்பத்தகாத மாற்றங்கள் மேலோங்கி வருவதால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முதல் கட்ட ஆய்வில் 2,396 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மத ரீதியாக, பிராந்திய ரீதியாக, வயது ரீதியாக கருத்து சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு நடத்தப்பட்டது. இந்த முதல்கட்ட ஆய்வின் முடிவு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. நம்பிக்கையும், சுற்றுச்சூழல் சார்ந்த நிலைப்புத் தன்மையும் என்ற அடிப்படையில் இந்த கருத்து திரட்டு பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த முதல்கட்ட ஆய்விலேயே சுற்றுச்சூழல் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் ஹிந்துக்களே என்பது உறுதிபட நிலைநாட்டப்பட்டுள்ளது.
முதல்கட்ட ஆய்வைத் தொடர்ந்து 2வது கட்ட ஆய்வு தர நிர்ணயம் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்ட ஆய்வில் யூதர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் போன்றோரிடம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு நேர்காணல் நடத்தப்படவில்லை. இந்த 2ம் கட்ட ஆய்வில் இந்த மதங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு கருத்து திரட்டப்பட்டது. ஹிந்துக்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்பதை ஒருமித்த நிலைப்பாடு காணப்படுகிறது என்பது இந்த ஆய்வின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹிந்துக்கள் ஒரு பழத்தை பறிப்பதாக இருந்தாலும் அல்லது ஒரு மலரை கொய்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாக செய்கிறார்கள். இது அவர்களது ரத்தத்திலேயே ஊறி உள்ளது. இந்த பாரம்பரியம் காலங்காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 64 சதவீத ஹிந்துக்கள் சுற்றுச்சூழல் பராமரிப்பில் அதிக நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் 31 சதவீத முஸ்லீம்களும், 22 சதவீத கிறிஸ்தவர்களும்தான் சுற்றுச்சூழல் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.
ஹிந்துக்களின் நுகர்வு சார்ந்த அம்சங்கள் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் உள்ளன. 78 சதவீத ஹிந்துக்கள் இதில் மிகவும் திடமாக உள்ளனர். தானம் அளிப்பது, நன்கொடை நல்குவது உள்ளிட்ட அறப்பண்புகள் ஹிந்துக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளன. 63 சதவீத ஹிந்துக்கள் தங்களிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தானம் அளிப்பதை கடமையாக கருத வேண்டும் என்ற மனோபாவத்துடன் உள்ளனர். சுற்றுச்சூழலைக் காக்க கூட்டு முயற்சி அவசியம். இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உடையவர்களாக 44 சதவீத ஹிந்துக்கள் உள்ளனர்.
பிற மதங்கள் எல்லாம் இறுக்கமான நிலைப்பாடு கொண்டவை. ஆனால், சனாதன தர்மம் நெகிழ்வுத் தன்மை கொண்டது. சனாதன தர்மம் எதையும் கட்டாயப்படுத்தவில்லை. அது கலங்கரை விளக்கம் போல ஒளி காட்டி வழி காட்டுகிறது. இதை பாரம்பரியத்தில் ஊறியுள்ள ஹிந்துக்கள் உள்வாங்கிக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு அனுசரணையாக இயங்கி வருகின்றனர்.
ஹிந்துக்களின் பக்தியிலேயே சேவையும் அடங்கியுள்ளது. சக மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்களுக்கும் இதர ஜீவராசிகளுக்கும் உதவ வேண்டும் என்ற விழுமியம் ஹிந்துக்களிடம் ஆழமாக வேரூன்றி உள்ளதைப் போல வேறு எந்த மதத்தினரிடமும் ஆழமாக வேரூன்றவில்லை.
2025ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் கட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. வெளியே இருந்து திணிக்கப்படும் கருத்து ஏற்படுத்தும் தாக்கத்தை விட இயல்பாகவே உள்ளத்தில் மேலோங்குகின்ற சிந்தனை ஏற்படுத்தும் தாக்கம் வலுவானதாக இருக்கும். பிற மதங்கள் குறிப்பிட்ட கருத்துக்களை திணிக்க முயன்கின்றன. ஆனால் சனாதன தர்மம் ஜீவநதியைப் போல ஓடிக் கொண்டே இருக்கிறது. இது மக்களுக்கு பயன்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது. சனாதன தர்மம் ஜீவ நதியைப் போன்றது. மற்றவை தேங்கியுள்ள குட்டைகளைப் போன்றவை.
சனாதன தர்மம் இந்த பூமியை தெய்வீக மாதாவாக கருதுகிறது. இந்த கோட்பாடு தான் அனைவருடனும் யாவற்றுடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்பதை கற்பித்து வருகிறது. ஹிந்து தர்மம் இணக்கத்துக்கு உன்னத எடுத்துக் காட்டாக விளங்குகிறது. ஆனால் மற்ற மதங்களைப் பற்றி இவ்வாறு கூற முடியவில்லை. சனாதன தர்மத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த விழுமிய தத்துவத்தை அகிலம் முழுவதும் நீட்சியுற வைத்தால் வையகம் தலைத்தோங்கும் என்பது திண்ணம்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி