செல்லாது செல்லாது

கடந்த நவம்பர் மாதம் கேரளா, கொச்சி சைரோ மலபார் சர்ச்சில் ஒரு முஸ்லிம் மணமகனுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் இரண்டு பாதிரிகள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒரு லவ்ஜிகாத், முஸ்லிம்கள், கிறிஸ்தவ பெண்களை மயக்கி திருமணம் செய்து மதம் மாற்றுகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரிக்க சர்ச் மூன்று நபர் விசாரணை குழு அமைத்தது. அதன்படி, பிஷப்பிடம் முறையான அனுமதி பெறாததால் அந்த திருமணம் கிறிஸ்தவ முறைப்படி செல்லாது, அதில் கலந்துகொண்ட பாதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.