சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை ஓரிரு வார்த்தையில் சொல்ல முடியுமா?

ஆண்டிக் கோலத்திலுள்ள முருகன் படத்தைப் பூஜையறையில் வைக்கலாமா?

– சி. வைஜெயந்தி, திருவண்ணாமலை

தாராளமாக வைக்கலாம். அந்தப் படத்தைப் பார்க்கப் பார்க்க நமது மனதிலும் பற்றற்ற மனப்பான்மை உருவாகும்.

 

சுப காரியங்களின்போது வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது ஏன்?

– எல். மதிவழகன், சேலம்

மணமகளே மணமகளே வா… வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா… வா…” என்ற பழைய பாடல் நினைவிருக்கிறதா? எல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஆனால் ராணுவ மார்ச்சிங்கில் (நடைப்பயிற்சி) இடது காலைதான் முதலில் எடுத்து வைக்க வேண்டும். லெப்ட், ரைட் என்றுதானே சொல்கிறார்கள். யாரும் ரைட், லெப்ட் என்று சொல்வதில்லையே.

 

* சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை ஓரிரு வார்த்தையில்

சொல்ல முடியுமா?vivekananda

– வி. செந்தில்நாதன், மதுரை

தொண்டு – துறவு.

 

தற்காலத்தில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் மீது மதிப்பும், மரியாதையும் குறைந்து வருவது ஏன்?

– கே. வைத்தியலிங்கம், கும்பகோணம்

தரமற்ற ஆசிரியர்கள்தான் முதல் காரணம்.

 

எனது ராஜதந்திரத்தால்தான் திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்கிறாரே வை.கோ?

– ஏ.எஸ். கண்ணன், கோயம்புத்தூர்

வை.கோ. அமைத்த கூட்டணி அதிமுகவின் ‘ஆ’ டீம் என எல்லோருமே நினைத்தது உண்மையாயிற்று.

 

சென்னையில் நடைபெற்ற சுவாதி கொலை பற்றி?

– வி. கவிதா, வேலூர்

மனித நாகரீகம் மெல்ல மெல்ல காட்டுமிராண்டி நாகரீகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ?

 

ஆசிட் வீசுவதும் கொலை செய்வதும் ஒரு தலைக் காதலால் ஏற்படும் விபரீதங்களா?

– பி. சிவலிங்கம், திருநெல்வேலி

* எனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பது காதலே இல்லை. இது ஒருவித மனோவியாதி. காதலுக்கு முயற்சி செய்வது தவறில்லை. வெற்றி பெறவில்லை என்றால், எங்கிருந்தாலும் வாழ்க” என்று நினைப்பதுதான் மரியாதை.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.