ஒரு குருவும் அவர் சீடனும் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தனர். கரையோரத்தில் ஒரு அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் காலில் காயம்பட்டு நடக்க முடியாமல் இருந்தாள்.
சுவாமி! என்னைத் தூக்கிக் கொண்டு அக்கரையில் விட்டு விடுகிறீர்களா?” என்று அந்தப் பெண் குருவிடம் கேட்டாள். அவரும் மறுவார்த்தை சொல்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றைக் கடந்து அக்கரையில் விட்டார். சீடனுக்கோ இது அதிர்ச்சி. சன்னியாசியான தன் குரு ஒரு இளம் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாமா, அது தர்மமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குருவை அணுகி மெதுவாக குருவே, தாங்கள் ஒரு பெண்ணைத் தொட்டுத் தூக்கியது சரிதானா?” என்று கேட்டான்.
அடே… நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேன். நீதான் இன்னமும் அவளைத் தூக்கிக் கொண்டு வருகிறாய். இனியாவது இறக்கிவிடு” என்றார் குரு.