இடதுசாரி பத்திரிகையான தி ஹிந்து, சீனாவின் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டதுடன் அதற்கு கைமாறாக, சீனா நம் ராணுவத்தினர் மீட்ட எல்லைகளை மீண்டும் கைப்பற்றியதாக பொய் செய்தியை வெளியிட்டிருந்தது. தற்போது அந்த வரிசையில் சீனா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எட்டு முழுபக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. மேம்போக்காக பார்த்தால் அது சீனாவின் வளர்ச்சியை பற்றிய விளம்பரமாக தெரிந்தாலும், அது சீனா குறித்து பத்திரிகைகள் நல்லவிதமாக எழுத வைக்க. சீன பொருட்களின் விற்பனையை பாரதத்தில் அதிகரிக்க, மக்களை குழப்ப சீனா மேற்கொள்ளும் உள்நோக்கமுடைய நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.