தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியில் உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம், களங்கப்படுத்தப்படுகிறது. பக்தர்களால் ஆலயங்கள் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு. ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
* கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் நிதியாக ரூ. 1,000 தரப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
* மாற்று மத திருவிழாக்களுக்கு அளவில்லா சுதந்திரம் தரும் தமிழக அரசு, பழனியில் நடைபெற உள்ள தைப்பூச விழாவுக்கு, கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது என்பது கண்டிக்கதக்கது.
* கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், அதுவரை அறநிலையத் துறை நியாயமாக நடக்க வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஹிந்துக்களின் கோரிக்கை. இந்நிலையில், அறநிலையத் துறைக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கூடுதல் நிர்வாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு, ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்களால் பக்தர்கள் கைக்கு கோவில்கள் மாறும் வரை இத்துறையில் நல்லது நடக்கும் என நம்புவோம்.