சிறுமி தற்கொலை

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 18 வயதான சிறுமி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர் உட்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவர் தனது தாய், சகோதரனுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தாயும் சகோதரனும் வெளியே சென்றிருந்தபோது, இந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பேசிய அவரின் தாய், ‘எனது பெண்ணை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் கேரள காவல்துறையும் அரசும் அதனை கண்டுகொள்ளவில்லை’ என்றார். பெண்கள் உரிமை ஆர்வலர் உஷா புனாதி கூறுகையில், ‘இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பொறுப்பு குழந்தைகள் நலக் குழுவுக்கு உள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிறுமியின் வீட்டிற்கு தவறாமல் சென்று அங்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், ஆனால், இந்த வழக்கில் அப்படி எதுவும் செய்யப்படவில்லை’ என குற்றம் சாட்டினார்.