சிக்னல் கொடுக்கும் சிக்னல்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்துள்ளது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனாளிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலிக்கு மாறிவருகின்றனர். அந்த வரிசையில் சிக்னல் செயலியை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இது வாட்ஸப்பைவிட அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் தமிழகத்தில் பரவலாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் எதிர்ப்பால் மிரண்டுபோன வாட்ஸப், தன் பயனாளர்களின் தகவல்களை முகநூலுடன் இணைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.