ஆயிரம் ஆண்டுகள் அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்த போதும் பாரத மைந்தர்களாகிய நாம் நமது அடையாளத்தை தொலைக்காமல் இருந்ததற்கு தொன்மையான நம் ஆன்மிகம், பண்பாடு, கலாசாரம், கல்வி மருத்துவம், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் காரணமாகும்.
ஆனால் 1947ல் சுதந்திரத்திற்கு பிறகு அதிலும் கடந்த சில பத்தாண்டுகளில் நமது நாடு அந்நியர்களின் சதிவலையில் சிக்குண்டிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
குறிப்பாக அந்த சதிப்பின்னல் நம் மக்களின் மனதை என்றும் பண்படுத்தும், பயிற்றுவிக்கும், பராமரிக்கும் குடும்பம் என்கிற அமைப்பை தகர்க்கும்விதமாக உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்; உணரவேண்டும்.
கூட்டுக் குடும்பங்களால் நமது பாரதியர்கள் எத்தனையோ மொழி, உணவு, பழக்க வழக்கங்கள் கொண்டிருந்த போதும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதனில் முக்கிய இரு புள்ளிகளான தலைவன் – தலைவி இருபாலருக்குமான உறவில் இருந்த கடமையுடன் சேர்ந்த காதலையும் கட்டுப்பாட்டையும் தூக்கி எறிந்துவிட்டு காதல், தனிமனித உரிமை, பெண் விடுதலை என்ற பெயர்களில் இளம் உள்ளங்களில் நச்சு ஊட்டிவிட்டது.
என்பதே பணத்தை சார்ந்தது என்ற கருத்தியல் வளர்ந்து விட்டதால் குடும்பத்தில் உறுப்பினர்கள் தங்களுக்குள்ளான நெருக்கத்தை தொலைத்து வருகிறார்கள்.
முக்கியமாக,குடும்பத்தின் பொருளாதாரம் என்பது சேமிப்பு, சிக்கனம், அத்தியாவசியம் என்பதாக இருந்தது. இன்றோ ஆடம்பரம், வெளிப்பூச்சுக்கு முக்கியத்துவம், தண்ஞு ச்ணஞீ ணாடணூணிதீ கலாச்சாரத்தால் தேவை அதிகரிப்பு, இந்த மாயாஜால வாழ்க்கைத் தரத்திற்காக நேரங்காலம் பார்க்காமல் அடிப்படை தேவைகளுக்கு நேரம் தரமுடியாமல் பணம் ஈட்டுவதே நமது நோக்கமாகவும் அதற்காக எத்தகைய வழியையும் மேற்கொள்ளும் மனதும் வளர்ந்திருப்பது.
குடும்பத்தில் கணவன் – மனைவி உறவின் புனிதம் விட்டுக்கொடுப்பதும் பரஸ்பர மரியாதை மற்றும் குற்றம் குறைகளுடன் ஏற்று குடும்பம் நடத்துவதும் வம்ச விருத்திக்காக குழந்தைகளைப் பெறுவதும் அவர்களை பாதுகாத்து நமது பாரம்பரிய பண்பாட்டை ஊட்டி வளர்ப்பதும் என்பது மறைந்து ஆண் – பெண் உறவு என்பதே பாலியலுக்கு மட்டுமே என்ற மனோபாவம் வளர்ந்திருப்பது, அதனால் செம்புல பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சம் கலந்த” நம் வாழ்வியலில் இன்று ஒருதலைக் காதல் மட்டுமே சீமைக் கருவேலமாய் செழித்துவிட்டது.
‘சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்; சிறுவர் அனைவரும் ராமனே’ என்று பயிற்றுவித்த நமது சமூகத்தில் சின்னஞ் சிறுமியரையும் காமக் கண்ணுடன் பார்ப்பது அதிகரித்துவிட்டது.
பெண்கள், வளரிளம் பெண்களாகட்டும் தாய்மார்களாகட்டும் முதுமை நிறைந்த கிழவிகளாகட்டும் குடும்பம் என்ற பாதுகாப்பிலிருந்து வெகுவாக விலக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தேச முன்னேற்றத்திற்கு 500 ஆண்கள் வேண்டாம்; 50 பெண்கள் போதும் என்று பெருமையுடன் முழங்கினார் சுவாமி விவேகானந்தர். நம் பெண்கள் அத்தனை வலிமையுடையவர்கள். இயற்கையாக பெற்ற வரத்துடன் இந்திய மண்ணின் பண்பாட்டு விழுமியங்கள் உரம்பெற்றவர்கள் அவர்கள். அத்தகையவர்களால்தான் ஆதிசங்கரர், வீர சிவாஜி, அம்பேத்கர், ரமணர் என எண்ணற்ற மகான்களை சமுதாயத்திற்கு பெற்றுத்தர முடிந்தது. ஆனால் இன்று…
நம் மண்ணை கொள்ளையிட திட்டமிடுபவர்களால் பெண் குலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. உலகத்தை காக்கப்போவது பாரதம் என்றால் அந்த பாரதத்தையே காக்கப்போவது நம் தாய்க்குலமாக மட்டுமே இருக்க முடியும். அவர்களை விழிப்புடன் பாதுகாப்பது குடும்பத்திலும், சமுதாயத்தின் எல்லா பக்கங்களிலும் ஹிந்துக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமை. எனவே விழிப்புணர்வுடன் இருப்போம்; விழிப்புணர்வை ஊட்டுவோம்.