சர்வதேச ஐபி குறியீட்டில் பாரதம்

அமெரிக்க வர்த்தக சபையால் வெளியிடப்பட்ட சர்வதேச அறிவுசார் சொத்து (ஐபி) குறியீட்டில் 55 முன்னணி உலகப் பொருளாதார நாடுகளில் பாரதம் 42வது இடத்தில் உள்ளது. “இதன்படி, உலக அரங்கில் இந்தியாவின் அளவு மற்றும் பொருளாதார செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில், ஐபி உந்துதல் கண்டுபிடிப்புகள் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மாற்ற விரும்பும் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு பாரதம் முன்னணியில் உள்ளது” என்று அமெரிக்க வர்த்தக சபையின் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கையின் மூத்த துணைத் தலைவர் பேட்ரிக் கில்பிரைட் கூறியுள்ளார். மேலும், “காப்புரிமை மற்றும் பதிப்புரிமைச் சட்டங்கள் முதல் அறிவுசார் சொத்துக்களைப் பணமாக்குவதற்கான திறன் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களின் ஒப்புதல் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையின்படி, சக்திவாய்ந்த தடை உத்தரவுகளை வழங்குவதன் மூலம் பதிப்புரிமை திருட்டுக்கான வலுவான முயற்சிகளை பாரதம் தொடர்ந்து பராமரித்து வருகிறது. பாரதம் தாராளமாக ஆய்வு மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் அறிவுசார் சொத்துக்கள் அடிப்படையிலான வரிச் சலுகைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், திருட்டு மற்றும் ஊடுருவல்களின் எதிர்மறையான தாக்கம் குறித்து வலுவான விழிப்புணர்வு முயற்சிகளையும் கொண்டுள்ளது. சிறு குறு தொழில் துறையினருக்கான அறிவுசார் சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான இலக்கு நிர்வாக ஊக்குவிப்புகளில் பாரதம் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது. பதிப்புரிமை மீறும் உள்ளடக்கத்திற்கு எதிராக அமலாக்கத்தை மேம்படுத்த பாரதம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபி சொத்துக்களை சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சிறந்த கட்டமைப்பையும் வழங்குகிறது. எவ்வாறாயினும், அதன் அறிவுசார் சொத்துக் கட்டமைப்பில் நீண்டகால இடைவெளிகளை நிவர்த்தி செய்வது, பிராந்தியத்திற்கான ஒரு புதிய மாதிரியை உருவாக்கும் பாரதத்தின் திறனுக்கும் அதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானதாக இருக்கும்” என்று கூறினார்.