‘நான் ஏன் காந்தியை கொன்றேன் என்ற திரைப்படத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்’ என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார். நான் ஏன் காந்தியை கொன்றேன் என, நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் கூறியதை தலைப்பாக வைத்து திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. டில்லி உச்ச நீதிமன்றத்தில், காந்தியை கொன்றதை கோட்சே நியாயப்படுத்திப் பேசியது வரலாறு ஆகியிருக்கிறது. காந்தியை கொல்வது தன் கடமை என்று கோட்சே கூறினார். காந்தி பற்றிய திரைப்படம் வெளிவரக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் இந்தத் திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சமூக ஊடக பயனாளிகள், ‘நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, புர்ஹான் வாணி உள்ளிட்டோரை பயங்கரவாதிகளாக கருதாமல் அவர்களை ஹீரோவாக கொண்டாடுபவர்களும், கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி பலரை கொன்ற பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோருபவர்களும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோருபவர்களும் இதைகுறித்து பேசலாமா? இதெல்லாம் உங்கள் கருத்து சுதந்திரம் என்றால் படத்தை வெளியிடுவது அவர்களின் கருத்து சுதந்திரம்தானே?’ என பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.