தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் சிலரால் இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பரவியது. அதற்காக ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயத்தை குற்றம் சுமத்தக் கூடாது என்பது சரியான வாதமாக இருந்தாலும், சில கேள்விகள் இயற்கையாகவே எழுகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட அந்நிய நாட்டு முஸ்லிம்களால் தான் இந்த தொற்று நோய் பரவியது. அல்லாவின் பிள்ளைகள் நாங்கள், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதி கொண்டு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் வறுத்தெடுக்கும் வகையில் முஸ்லிம்கள் நடந்து கொள்கிறார்கள். நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆய்வுக்கு சென்ற மருத்துவ பணியாளர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்பதை கூட ஊடகங்கள் எழுத அவர்களின் எழுத்தாணி மறுப்பு தெரிவிப்பது போல் செயல்படுகிறார்கள். ஒரு சமுதாயத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் முன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்ற நோக்கம் சரியானது. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியவர்கள், அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களே.
கொரோனா தொற்று நோய் கடுமையாக பரவுகிறது என்பதால் மத்திய மாநில அரசுகள் இரண்டு முறை ஊரடங்கு நிலையை மேலும் நீடிக்க உத்திரவிட்டுள்ளார்கள். மதம் பார்க்க வேண்டாம் மனித நேயத்தை பார்க்க வேண்டும் என உபதேசம் செய்யும் அரசியலவாதிகள், அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என உபதேசம் செய்வதில்லை. இந்தூர், டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற இடங்களில், சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்த போது, நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள தனிமைப்படுத்த முற்பட்ட போது, பணியிலிருந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இம்மாதிரியான தாக்குதல்கள் வானியம்பாடி மற்றும் ஆம்பூரிலும் நிகழ்ந்துள்ளது. சென்னையில் இரண்டு இடங்களில் சீல் வைத்த தடுப்புகளை அப்புறப்படுத்த முஸ்லீம்கள் நூற்றுக் கணக்கானவர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என 144 தடை உத்திரவு பிறபிக்கப்பட்டது. சட்டத்தை மீறியதாக மற்ற சமுதாயத்தினர் மீது பாயும் சட்டம் மட்டும் ஏன் முஸ்லிம்கள் மீது பாயவில்லை.
மதம் பார்க்க கூடாது மனித நேயம் பார்க்க வேண்டும் என ஒப்பாரி வைக்கும் ஓட்டு பொறுக்கிகள், மதுரையில் தெற்கு வாசல் பகுதியில் தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என கும்பலாக ஆர்பாட்டம் , ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்களுக்கு ஆதரவாக திறந்த பஜ்ஜி கடையை திறக்க வேண்டும் என திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் முஸ்லிம்கள் நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்பாட்டம். ஆர்பாட்டம் மற்றும் மறியல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசும் தயக்கம் காட்டுகிறது சட்டத்தை போட்ட அரசு கூட, வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். வேடிக்கை பார்த்து வெஞ்சாமரம் வீசவா சட்டம் இருக்கிறது. கொரோனாவை பரப்பிய வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு ஆதரவாக அரசாங்கத்தை விமர்சனம் செய்து அறிக்கைவிடும் ஜவஹிருல்லா போன்றவர்கள், தனது சமுதாய மக்களுக்கு அறிவுரை கூற முன் வருவதில்லை.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழகம் திரும்பியவர்கள் 1500 பேர்கள், அவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை நடத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவித்த பின்னர் கூட முழுமையாக தங்களை பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.வின் தலைவர் ஸடாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா நோய் நமக்கு எதிரி, ஆனால் கொரோன நோய் தொற்றியவர்கள் நமக்கு எதிரி கிடையாது என்கிறார். முழு பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறுவதற்கு பதிலாக, அரசு முஸ்லிம் சமுதாயத்தை குற்றம் சுமத்தும் விதமாக அறிக்கை விடுகிறது என ஆவேச குரல் கொடுப்பது மட்டும் நியாயமாக என்பதை சிந்திக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த CAA, மற்றும் கொண்டு வரப்படும் என கருதும் NPR, NRC போன்ற சட்டங்களை எதிர்த்து மாத கணக்கில் போராட்டம் நடத்த முஸ்லிம்களை தூண்டிய , முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தியோபந்த் முஸ்லிம் அமைப்புகள், கொரோனா தொற்று ஏற்பட தப்லீக் ஜமாத் மாநாடும் ஒரு காரணம் என்பதை கூற தயக்கம் ஏன் காட்டுகிறார்கள். சுற்றுலா விசாவில் வந்து மத பிரச்சாரம் நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை என்பது தெரிந்தும், தப்லீக் மாநாடு ஏன் நடத்தப்பட்டது என்பதற்குறிய காரணங்களை கூற ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்.
சட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் என அரசுக்கு உபதேசம் செய்யும், மு்ஸ்லிம் அமைப்புகள், கொரோன தொற்று நோயிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அரசுடன் இணைந்து செயல்படுவோம் என அறிக்கை விட முன் வரவில்லை. சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் போட வெண்டும் என்றும், அப்பொழுது தான் அரசுடன் பேச்சு வார்ததை நடத்தப்படும் என சவால் விட்ட தமிழக இஸ்லாமிய அமைப்புகள், ரமலான் நோன்பிற்காக இலவச பச்சரிசி கேட்க மட்டும் உரிமை இருக்கிறதா. கேட்டவுடன் அரசு அரசி கொடுத்து போல், அரசின் உத்திரவை கடைபிடிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளை ஏன் கேட்கவில்லை.
ஈரோடு சரவணன்