சபரிமலை மக்கள் தொடர்ந்து போராட ஆர்.எஸ்.எஸ் ஆதரவு

குவாலியரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழு கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில்

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி (இடது) ;

அகில பாரத செய்தி தொடர்பாளர் அருண் குமார்

மார்ச் 8,9,10 தேதிகளில் குவாலியரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபை சபரிமலை கோயிலின் புனிதம் காக்க மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றிய தீர்மான வாசகம்:

”ஹிந்து நம்பிக்கைகளையும் பாரம்பரியத் தையும் இழிவுபடுத்தி தாக்குவதில் பாரதியத் தன்மைக்குப் புறம்பான கண்ணோட்டத்தின் அடிப்படையிலான சுயலாப சக்திகளின் திட்டமிட்ட சதி உள்ளது என்பது அகில பாரத பிரதிநிதி சபையின் உறுதியான கருத்து. சபரிமலை கோயில் சம்பவம் இந்த சதிக்கு சமீபத்திய உதாரணம்.

ஹிந்துத்துவம் என்பது ஒற்றை மார்க்கமோ பிறரை ஒதுக்கித் தள்ளக்கூடிய சிந்தனையோ அல்ல. அது பல்வேறு கலாச்சார பிரதி பலிப்புகள் கூடிய அலாதியான வழிபாட்டு முறை, பாரம்பரியம், உள்ளூர் பண்டிகைகளை ஒரு மித்தே உள்ளடக்கிய வாழ்க்கைச் சிந்தனை. ஒற்றைக் கருத்தைத் திணிப்பது நம் நாட்டின் பாரம் பரியத்தின் ஆணிவேரான பன்முகத் தன்மைக்கு முரணானது.

தனது பழக்கங்கள், பாரம்பரியம் இவற்றில் ஹிந்து சமுதாயம் என்றுமே காலத்திற்குத் தகுந்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு வந்துள்ளது. அத்தகைய சீர்திருத்தங்கள் சமுதாய, சமய, ஆன்மிக தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு, கருத்தொற்றுமை காண்பதே பிரதான முறை என ஏற்கப்பட்டுள்ளது. வெறும் சட்ட நடைமுறை அல்ல, உள்ளூர் பாரம்பரியமும் ஒப்புதலும் சமுதாயத்தின் போக்கில் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்துகிறோம் என்கிற பெயரில் ஹிந்துக்களின் நம்பிக்கையை கேரள இடது முன்னணி அரசு ஒடுக்குகிற துரதிருஷ்டவசமான சூழ்நிலையை முழு ஹிந்து சமுதாயமும் எதிர்கொள்கிறது.

கோயிலின் தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையேயான அலாதியான உறவிற்கு சபரிமலை கோயில் உதாரணம். பல ஆண்டு களாக சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டு பழக்கத்தில் உள்ள நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளித்தது துரதிருஷ்டவசமானது. சமயத் தலைவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படவில்லை. பெண் பக்தர்களின் உணர்வுகளும் ஏற்கப்படவில்லை. எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் கூறப்பட்ட தீர்ப்பால், எத்தனையோ நூற்றாண்டு களாக சமுதாயம் போற்றி பாதுகாத்து வந்த அலாதியான பாரம்பரியம் தகர்க்கப்பட்டது.

சி.பி.எம் தலைமையிலான கேரள அரசின் செயல்களால் ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. கடவுள் நம்பிக்கை அற்ற, தீவிர இடதுசாரி பெண்களை ரகசியமாக கோயிலுக்குள் கொண்டு சென்ற செயல் ஐயப்ப பக்தர்களின் மதநம்பிக்கைக்கு பலத்த அடி. கம்யூனிஸ்ட்களின் அற்ப அரசியல் லாபத்திற்காகவும் ஹிந்துக்களுக்கு எதிராக மற்று மொரு சிந்தாந்த தாக்குதல் துவக்கும் நோக்கத்திலும் இது நடத்தப்பட்டுள்ளது. தங்களது மத நம்பிக்கையையும் உரிமையையும் காத்துக் கொள்ள பக்தர்கள், குறிப்பாக பெண் பக்தர்கள், இதுவரை காணாத வகையில் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந் தார்கள்.

பக்தர்கள் கூட்டாக வெளிப்படுத்திய உணர்விற்கு அகில பாரத பிரதிநிதி சபை ஆழ்ந்த மரியாதையை பதிவுசெய்கிறது. கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க தொடர்ந்து அமைதியான வழியில் கட்டுப்பாட்டுடன் போராடுமாறு பக்தர்களை அகில பாரத பிரதிநிதி சபை கேட்டுக்கொள்கிறது. பக்தர்களின் நம்பிக்கைகள், மத உணர்வு, ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சொந்த மக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்துவிட வேண்டாம் என்றும் அகில பாரத பிரதிநிதி சபை கேரள அரசைக் கேட்டுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள சீராய்வு மனு உள்ளிட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது, மேற்கூறிய எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளும் என பிரதிநிதி சபை நம்புகிறது. ‘சபரிமலை புனிதம் காப்போம்’ இயக்கத்திற்கு எல்லா விதத்திலும் தேச மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என அகில பாரத பிரதிநிதி சபை கேட்டுக் கொள்கிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *