நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீண்ட காலமாக நீடித்து வந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் முஸ்லிம் நலச் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர் மற்றும் ஜே.எச்.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததுடன் தேவஸ்தானத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இப்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுடன் தேவஸ்தானம் சிவில் நீதிமன்றத்தை அணுகி அதனை செயல்படுத்த கோரலாம். எனினும், முஸ்லிம் நலச் சங்கம் தேவஸ்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த நிலத்திற்கு ஈடாக நிலத்தை வழங்குதல் அல்லது இழப்பீடு வழங்குதல் மூலம் கோயில் நிலத்தில் உள்ள மசூதியை தக்கவைத்துக்கொள்ள முயலலாம். ஹிந்து விரோத தி.மு.க அரசின் கீழ் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறையும் இதனை எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக ஏற்றுக் கொள்ளும் சாத்திய கூறுகள் உள்ளன என ஹிந்து அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. மேலும், இதற்கு உதாரணமாக, வடபழனியில் உள்ள மசூதிக்காக, இந்து முன்னணியினரின் எதிர்ப்பையும் மீறி வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பொதுப் பாதையாக மாற்றியது, குயின்ஸ்லாந்து பூங்கா பிரச்சினையில் சந்தேகத்திற்கிடமான அறநிலையத்துறையின் செயல்பாடுகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சட்டவிரோத மசூதியை உடனடியாக இடித்து கோயில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஒருவேளை தி.மு.க அரசு மேற்குறிப்பிட்டவாறு இதில் சமரச முயற்சிகளை மேற்கொண்டால் அத்தகைய திட்டத்தை நாங்கள் எதிர்ப்போம், தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம். எந்த ஒரு ஹிந்து கோயில் நிலத்திலும் மாற்றுமத வழிபாட்டுத் தலங்கள் இருக்க முடியாது, கோயில் நிலங்களை விற்கக்கூடாது, கோயில் நிலம் கோயிலுக்கே என அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி ஆதாரம்: https://organiser.org/2022/08/12/91232/bharat/sc-order-puts-mosque-built-on-temple-land-in-a-spot-of-bother/