மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 2 நாள் பயணமாக நேற்று கோயம்புத்தூர் வருகை புரிந்தார். கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், பல்வேறு தொழில்துறையினருடன் கலந்துரையாடினார். இன்று, திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்காவை பார்வையிடுதல், ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.