‘கண்டது கானல் நீர்தான்’ என்பதை உணர்ந்தார்கள்
எழுபதுகளின் ஆரம்பத்தில் சுதாகர்ஜி, கோவை ஜில்லா பிரச்சாரக். நான் அப்போது பாண்டிச்சேரியில் பிரச்சாரக். யாதவராவ் ஜோஷிஜி அவர்கள் பங்குகொண்டு ஒரு நிகழ்ச்சி. கோவையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காகவே அவர் வந்திருந்தார். இரண்டே இரண்டு மாணவர்களுடன் நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அன்றையதினம் கோவை மாவட்ட ஷாகா எண்ணிக்கைகூட இரண்டுதான்!
ஆனால் இன்றைய தினம் கோவை நகரே ‘மகாநகர்’ ஆகியுள்ளது. ஈரோடு நகரமும் அதோடு போட்டி போடுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களின் ஷாகா எண்ணிக்கை, ௨௦௦ தாண்டிவிட்டது. சங்கத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதிய ஜனதா கட்சி போன்ற தேசிய, தார்மீக இயக்கங்களின் வளர்ச்சிகூட பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
நமது கருத்துகளைப் பிரதிபலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோவையிலும், நீலகிரியிலும் உள்ளனர். தமிழகத்திலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக கோவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் உள்ளார். இந்து முன்னணியிலும், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்திலும்கூட பல சிறந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
1980களின் துவக்கத்தில் மீனாட்சிபுரம் சம்பவத்தை ஒட்டி கோவையில் நடந்த ஹிந்து எழுச்சி மாநாடு குறிப்பிடத்தக்கது. காலம் சென்ற பத்மநாபன் என்ற விபாக் பிரச்சாரக்கின் தீவிர உழைப்பும் அதில் உள்ளடங்கியிருந்தது.
அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் படிப்படியாக விரிவடையத் தொடங்கின.
அதன்பிறகு இராம.கோபாலன் அவர்களின் விரிவான சுற்றுப்பயணம் தூங்கிக்
கொண்டிருந்த ஹிந்துக்கள் மத்தியில் ஒரு விழிப்பையும் வீராவேசத்தையும் எழுப்பியது. அடிப்படையிலேயே தெய்வ நம்பிக்கை கொண்ட கொங்கு மண்டல மக்களை இந்து முன்னணி வெகுவாக வசிகரித்தது.
ஆர்.எஸ்.எஸ்ஸூடைய தொடர் முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம்.
புதியவர்களைச் சேர்ப்பது, பயிற்சி அளிப்பது, கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, கீழ்ப்படியும் குணத்தை உருவாக்குவது, தோன்றி மறையும் நீர்க்குமிழி போன்ற எதிர்மறை எண்ணங்களைக் களைந்து நற்குணங்களைப் பதிய
வைத்து நிரந்தரமாக நீட்டிக்கவைப்பது போன்ற பணிகளை ஆ.ர்எஸ்.எஸ் செய்தது.
சுவாமி சின்மயானந்தர் தலைமையிலும், சுவாமி சித்பவானந்தர் வழிகாட்டுதலிலும், கோவை கெளமார மடாலயம் சுந்தர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் ஆகியோர்
முன்னிலையிலும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை, கோ பூஜைகளை, கஜ பூஜைகளை, ஒற்றுமை மாநாடுகளை நடத்தி, சங்கம் தனது பயணத்தை விரைவாக்கியது.
வால்பாறை – வேட்டைக்காரன் புதூரில் இருந்து, கவுண்டம்பாளையம் வழியாக, குமரப்பாளையம் தாண்டி, அணிக்குழை மேல் ஏறி, தொட்டபெட்டாவில் சிகரம் தொட்டு, மேகத்தோடு பேசி, சிறுவாணிக்கு அருகிலும், பவானி, நொய்யல் ஆறுகளின் கரைகளிலும், பீளமேட்டிலும், லட்சுமி மில்ஸ் எதிரிலும் ஈரோட்டு நெசவாளர்களின் பவர்லூம்களின் அருகிலும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் வெகுவாக வளர்ந்தன. சுவாமி சித்பவானந்தருடைய நூற்றாண்டு விழாவையும் விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவையும் ஹெட்கேவாரின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தினோம்.
கோவை பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் குழந்தைவேலு அவர்களின் கருத்து இன்னும் என் நெஞ்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது: ‘நான் காந்திஜியை நேரில் பார்த்துப் பிரம்மிப்படைந்தேன். விவேகானந்தரை பார்த்ததில்லை. ஆனால் அவரது எழுத்துக்களைப் படித்து ஊக்கமடைந்தேன். நான் டாக்டர் ஹெட்கேவாரைப் பார்த்ததுமில்லை; அவரது எழுத்துக்களைப் படித்ததுமில்லை. ஆனால் அவர் வழிவந்த ஊழியர்களைப் பார்த்து உற்சாகமடைந்தேன்.
சமூகத்தில் பலநிலைகளிலும் இருந்த பலரும் ஆர்.எஸ்.எஸ்ஸூடன் நெருக்கமாக இருந்தார்கள். இந்நிலையில் பல புதியவர்கள், மணிகள் போல மாணிக்கங்கள்போலக் கண்டெடுக்கப்
பட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த பெருநிலக்கிழாரான
திரு.ஆர்.வி.எஸ். மாரிமுத்து அவர்கள். இவர் ஆர்.எஸ்.எஸ்ஸூடைய மாநிலத் தலைவராகவே பொறுப்பேற்றார். இன்னும் பல பெரியவர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற இடங்களில் சங்கப் பொறுப்பிற்கு வந்தார்கள். அவர்கள் தலைமையின்கீழ் சங்கம் சிங்கநடை போட்டது. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்த பல இளைஞர்கள் முழுநேர ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
இன்றும் எத்தனையோ இளைஞர்களும் பெரியவர்களும், விவசாயம், வியாபாரம் போன்ற
வற்றைச் செய்துகொண்டே, மில்வேலைக்குச் சென்றுகொண்டே ஆர்.எஸ்.எஸ்ஸிலும் பணி
புரிகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸூம், கோவை மக்களுடைய இயற்கையை நேசிக்கின்ற மனப்
பான்மையைப் புரிந்துக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தன்னையும் ஈடுபடுத்திக்
கொண்டது.
அம்மக்களின் மனப்போக்குக்குத் தகுந்தாற்
போல் இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, சுதேசி உணர்வு போன்றவற்றை மையமாக வைத்தே ஆர்.எஸ்.எஸ்ஸூம் விளங்கு
கின்றது. இதனடிப்படையில் உண்மையான தெய்வீகமும், உண்மையான காந்தீயமும், ஆர்.எஸ்.எஸ்ஸூடன் இலங்கியிருப்பதைக் கண்டு பல தீவிர காங்கிரஸ் பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸூடன் பணியாற்ற முன்வந்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸூன் முன்னாள் அகில பாரதத் தலைவர் மானனீய பாளாசாகேப் தேவரஸ் அவர்களின் சுற்றுப்பயணம் அடிக்கடி நிகழ்ந்தது. அதைப் பார்த்துவிட்டு ‘இந்த
ஆர்.எஸ்.எஸ்ஸைக் கண்டு இந்திரா காந்தியே ஏன் பயப்படுகிறார்? என்று காண்பதற்காகவே பல பேர் ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு வந்தார்கள். அதில் குறிப்பிடத் தகுந்தவர் ஈரோட்டைச் சேர்ந்த திரு.முத்துச்சாமி.
இதுதவிர, திருப்பூரில் துவங்கிய பள்ளிக்
கூடம் மிக முக்கியமான ஒரு விளம்பர மையமாக அமைந்தது: ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்வி
அணுகுமுறை பற்றி ஒரு பெரும் விருப்பம் மக்களிடம் ஏற்பட்டது. பாலமலையில் மலைவாழ் மக்களிடையே நாம் செய்த தொண்டும்கூட அனைவரையும் ஈர்த்தது. குடும்ப சங்கமங்கள் பல நடந்தன. போத்தனூரில் ஆண்டுதோறும் திருவிளக்குப் பூஜைகள் நடந்தன.
இவ்வாறு பல்வேறு பணிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதைச் சார்ந்த இயக்கங்களும் தங்களது ஆன்ம ஈடுபாட்டைப் பெருக்கிய வேளையில்தான் பொறாமை கொண்ட சில முஸ்லிம் வன்முறையாளர்கள், ஜனா. கிருஷ்ண
மூர்த்தியையும், திருக்கோயிலூர் சுந்தரத்தை
யும் (1982), இராம.கோபான் அவர்களையும் (1984) தாக்கினார்கள்
தலைமை தாக்கப்பட்டால் இந்த இயக்கமே தகர்க்கப்பட்டுவிடும் என்று பகற்கனவு கண்டார்கள். எனவே தாக்குதல்கள் தொடர்ந்தன. வீரகணேஷ் (1989), வீரசிவா (1991) போன்ற பல அற்புதமான இளைஞர்களை வெட்டிச் சாய்தார்கள். அந்தச் சோகம் நிறைந்த நாட்கள் நமது கண்களில் கண்ணீர் வரவழைத்து நெஞ்சில் துக்கம் அடைக்கத் துவங்கிய அதே வேளையில், மேலும் பல படுகொலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கே குறிவைக்கப்பட்டது. கோவை நகரத்தையே மயான பூமியாக்க முயற்சிகள் நடந்தன. கோட்டைமேட்டில் பதுக்கி வைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் சைக்கிள் குண்டுகள் ஆர்.எஸ்.புரத்தையே அதிரவைத்தன. இன்னும் எத்தனையோ நூற்றுக்கணக்கான பேர், முஸ்லிம் வன்முறைக்குப் பலியாகிவிட்டனர். இத்தகைய சூழ்நிலைகளில் ஹிந்துக்கள் ஹிந்துக் கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும்கூட இன்றைய தினம் ஹிந்து இயக்கங்கள் அமைதியாக கொங்கு மண்டலத்தின் எல்லாப் பகுதிகளிலும் பணிபுரிந்து வருகின்றன. நம்முடைய நோக்கம் முஸ்லிம்களோடு சண்டையிடுவது அன்று! அவர்களையும் அரவணைத்துத்தான் செல்ல விரும்புகிறோம். ஆயினும் மதமாற்றத்தை நிச்சயமாக எதிர்க்கிறோம்.
இன்றைய தினம் ஹிந்து இயக்கங்கள் கோவையில் நன்றாக வளர்த்திருந்தும்கூட, இன்னும் எத்தனையோ சவால்கள் நம்முன் உள்ளன. அவற்றையெல்லாம் முறியடிக்கத்தக்க ஆற்றல் பெற்றாக வேண்டும்.
பல கிராமத்து கோயில்களில் அனைத்து சமுதாய ஹிந்துக்களும் செல்லமுடியாத நிலை உள்ளது. குடிப்பழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. வரதட்சிணை வலுக்கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. எனவே ஹிந்து எழுச்சியோடுகூட, சமூக மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் நமது இயக்கங்கள் வளர வேண்டும்.
பெர்னாட்ஷாவைப் பார்த்து ஒருமுறை ஒரு நிருபர் ‘உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? என்று’ கேள்வி கேட்டாராம். அதற்கு அவர் ‘‘எனக்கு டெய்லரைத்தான் பிடிக்கும் என்றார். ஏனென்றால் அவன்தான் ஒவ்வொரு முறையும் அங்கங்களை அளவெடுத்துத் தைக்கிறான்’’ அதேபோல இன்றைய ஹிந்து சமுதாயத்தை மேலும் சீர்படுத்த, அதன் குறைகளைச் சரியாக அளவெடுத்து, சிறப்பாகச் சீர்படுத்தவேண்டும்.
கட்டுரையாளர் : முன்னாள் ஆளுநர், அப்போதைய தென்பாரத ஊடகப்பிரிவு செயலாளர், ஆர்.எஸ்.எஸ்
(-௨௦௦௦ ஏப்ரல் ௧௪ விஜயபாரத இதழிலிருந்து)
– தொடரும்.