கோயில் 360 இணையவழி தரிசனம்

புது வருடம் துவங்கியதை முன்னிட்டு, மத்திய அரசின் கலாச்சாரத்துறை சார்பில், ‘கோயில் 360’ (https://temple360.in/) என்ற இணையதள போர்ட்டலைத் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. சுதந்திரத்தின் அமிர்த மகோத்சவத்தை முன்னிட்டு துவக்கப்பட்டுல்ல இந்த போர்ட்டல் முலம், எந்த இடத்திலிருந்தும் பக்தர்கள் 12 ஜோதிர்லிங்கம் மற்றும் சார் தாம் தரிசனம் உள்ளிட்டவற்ரை ஆன்லைனில் மேற்கொல்ள முடியும். பாரதம் முழுவதும் உள்ள பல முக்கிய கோயில்களின் நேரடி கேமரா பதிவுகளை இந்த இணையம் கொண்டிருக்கும். ஹிந்து தர்ம யாத்திரைகளின் மகத்துவத்தை பக்தர்கள் டிஜிட்டல் முறையில் கண்டுகளிக்க இது உதவும் என்பதுடன் இதில், பக்தர்கள் தரிசனம், இ ஆரத்தி, இ ஷ்ரிங்கர் மற்றும் இ நன்கொடை, இ பிரசாதம் பெறுவது உள்ளிட்ட பல சேவைகளை மேற்கொள்ள முடியும். சேவைகளுக்கு பணம் செலுத்தக்கூடிய ‘இ சேவைகள்’ உள்ளிட்ட கூடுதல் அம்சங்களையும் இதில் இணைக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த இணையம், தற்சமயம் குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில், உத்தரப் பிரதேசத்தின் காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில், மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஷ்வரர் மற்றும் கிரிஷ்னேஷ்வரரர் கோயில் ஆகிய நான்கு பிரபலமான கோயில்கள் உட்பட சுமார் 32 கோயில்களின் சடங்குகளை நேரலையில் ஒளிபரப்புகிறது. இதைத்தவிர, பத்ரிநாத் (உத்தரகாண்ட்), துவாரகா (குஜராத்), பூரி (ஒடிசா) மற்றும் ராமேஸ்வரம் (தமிழகம்) ஆகிய 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் நான்கு தலங்களிலிருந்து சடங்குகளை நேரடியாக ஒளிபரப்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.