கோயிலை இடிப்போரை கூண்டில் அடை – ஹிந்து முன்னணி

 திருமாவளவன், தான் ஹிந்துவா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஹிந்துக் கோயில்களை இடித்து கட்டுவேன் என்கிறார் (பெரம்பூரில் ஒரு முஸ்லிம் மேடையில் அவரது டிசம்பர் 6 பேச்சு). அவை ஆக்கிரமிப்புகள் என்கிறார். வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி ஹிந்துக் கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா? அதுமட்டுமல்ல, தமிழகத்தில் 3,000க்கு மேற்பட்ட கோயில்களை இடித்து மசூதி, தர்கா, சர்ச் கட்டியுள்ளதற்கு ஆதாரம் உண்டு. நாடு முழுவதும் 30,000க்கும் அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லிம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்தவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்சுகளாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா? ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஸ்ரீரங்கம் ஆலயம் போன்றவை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹிந்து கோயில்களாகத்தான் இருந்து வருகிறது. இப்படிப் பேசினால், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன். ஆனால், இலங்கை, மியான்மர் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லிம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மர் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கியா முஸ்லிம்களை அந்நாட்டு ராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டியடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லிம்களை புறக்கணிக்கிறார்களோ அதுபோல பாரதத்திலும் நடக்கவேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா?

ஹிந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும் ஹிந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஹிந்து முன்னணி கோரியுள்ளது.

 

 

One thought on “கோயிலை இடிப்போரை கூண்டில் அடை – ஹிந்து முன்னணி

 1. Sir…
  I feel so bad to say this…it really pains my heart…
  The culprits have changed the main deity in Thiruvapudaiyar temple in sellur in Madurai… I don’t know what happened to the Shiva idol — it’s a small one but now they have replaced it with a long shivlinga…..
  I really am worried…. There was a nandhi statue in the north east behind the Amman shrine… That also they have removed… People are unaware of all these things…
  Kindly do something…you can ask the people nearby… What happened to these…
  Lot of Christian groups behind all these I guess…
  (It’s my guess….
  Sahayam…was the collector then…
  I suspect that MLA now too who has friendship with grummer Suresh-a christian etc… – I might be wrong too…but I might be right too)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *